24.4 C
Chennai
Tuesday, Dec 24, 2024
age 18

சூப்பர் டிப்ஸ்! நெஞ்சு சளியை அகற்றும் இஞ்சி சட்னி

இஞ்சியில் பல வித மருத்துவ குணங்கள் உள்ளன.அஜீரணக் கோளாறை இஞ்சி சரி செய்யும். சளி, இருமல் இருப்பவர்கள் இந்த சட்னியை செய்து சாப்பிட்டால் நெஞ்சில் கட்டும் சளி கரைந்து போகும்.

தேவையான பொருட்கள்:இஞ்சி – 1/2 கப் நறுக்கியது,காய்ந்த மிளகாய் – 5,கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு,புளி – ஒரு கோலி அளவு,வெல்லம் – 1 தேக்கரண்டி,நல்லெண்ணெய் – தேவையான அளவு,உப்பு – தேவைக்கு ஏற்ப,கடுகு – சிறிதளவு,செய்முறை:இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.புளியை ஒரு பாத்திரத்தில் ஊறவைக்க வேண்டும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.பின்னர் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதே கடாயில் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களையும் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.பிறகு சட்னியை தாளிக்க, எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்ட வேண்டும்.சுவையான இஞ்சி சட்னி தயார்age 18