25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
large kudal k

சுவையான சுவையான குடல்குழம்பு.. செய்வது எப்படி. ?!

தேவையான பொருட்கள் :

ஆட்டுக் குடல் – ஒன்று,
சோம்பு – 2 ஸ்பூன்,
சீரகம் – 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
பட்டை – 4 ,
கிராம்பு – 6,
ஏலக்காய் – 4,
மிளகு – 1 ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 1 கப்,
வெள்ளைப் பூண்டு – 8 பல்,
இஞ்சி – சிறிதளவு,
சின்ன வெங்காயம் – ஒரு கப் (நறுக்கியது),
பெரிய வெங்காயம் – 2,
எண்ணெய் – 3 ஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
தக்காளி – 3,
மிளகாய்த் தூள் – 3 ஸ்பூன்,
மல்லித் தூள் – 5 ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
உப்பு – தே.அளவு.large kudal k

செய்முறை :

முதலில் மட்டன் குடலை சுத்தம் செய்து பொடியாக நறுக்க வேண்டும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.

சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், கிராம்பு, பட்டை, ஏலக்காய், தேங்காய் துருவல், மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றை மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும்.

பாத்திரத்தில் எண்ணெய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பில்லை போன்றவற்றை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி, பின் தக்காளியை சேர்க்கவும்.

சுத்தம் செய்து வைத்திருக்கும் குடலை வதக்கி, உடல் வெந்த பின்னர் மிளகாய் தூள், மல்லித்தூள், மசாலா சேர்த்து உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

தண்ணீரை ஊற்றி வைத்து 20 நிமிடம் வேகவைத்து, நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழையினை சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் குடல் குழம்பு தயார்..