23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
medium thumb 1

வெளியான பரபர ரிப்போர்ட்..! ஜோதிட சிறுவன் சொன்னது எல்லாம் பலித்தது இல்லை..!

கொரோனா வைரஸ் தாக்குதலை முன்பே கணித்த இளம் ஜோதிடரான அபிக்யா ஆணந்த் கூறிய எல்லா தகவல்களும் பலித்தது இல்லை என பிளாக் ஷீப் யூடியூப் சேனலை நடத்திவரும் விக்னேஷ் காந்த் பரபரப்பு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் ஆவார். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். இவர் சிறுவயதிலேயே வானவியல் சாஸ்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். தன்னுடைய துல்லியமான கணிப்புகள் மூலம் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் இந்த சிறுவன்.

இந்த சிறுவன் தனக்கென்று யூடியூப் சேனல் ஒன்றை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்து நடத்தி வருகிறார். அதில் ஜோதிடம் மற்றும் வானவியல் சம்பந்தமான செய்திகளையும் தன்னுடைய நேயர்களுக்கு பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக அபிக்யா தமிழ் சேனல் உலகம் முழுவதும் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்கக்கூடும் என கணித்திருக்கிறார்.

medium thumb 1

இவர் கணித்து கூறிய பல தகவல்கள் இதுவரை பலிக்கவில்லை எனவும் பல தரப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் பெரிய பிரச்சனை ஏற்படும். அந்த பிரச்சனை நோயாக கூட இருக்கலாம் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் இந்தியாவில் கடந்த வருடம் ஜூன் மாதம் அது போன்ற பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் முழுவதும் எண்ணெய் பொருட்களின் விலை அதிகம் ஆகும் எனவும் ஒரு வீடியோவில் அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போது உலகம் முழுவதும் எண்ணெய் விலை கணிசமாக குறைந்து கொண்டு வருகிறது. இந்தியாவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் சீரான விலையில் விற்கப்பட்டு வருகிறது.

அதேபோல இந்தியா, சீனா , பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்பதே உண்மையாகும். அதேபோல உலகப் போர் வெடிக்கும் அபாயமும் உள்ளது எனவும் அவர் கூறியிருந்தார். ஆனால் தற்போது உள்ள நிலையில் அதுபோன்ற சாத்திய கூறுகள் எதுவும் இல்லை என்பதே உண்மையாகும்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது சிறுவன் அபிக்யா ஆனந்த் கூறிய பல தகவல்கள் இதுவரை நடைபெறவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். ஆகையால் அவர் கூறிய கூற்றுக்களின் படி உலகம் பேரழிவை சந்திக்கும் என அச்சத்தில் மக்கள் யாரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் இதுவரை பதிவிட்டுள்ள வீடியோக்களில் வெறும் 30 வினாடிகளில் அவர் கூறிய சம்பவம் மட்டும் தான் நடைபெற்றுள்ளது.

இதனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர் கூறிய அனைத்து கருத்திற்கும் நாம் முக்கியத்துவம் தருவது என்பது சாத்தியமற்றது. இதனை வைத்துப் பார்க்கும் பொழுது அதிசய ஜோதிட சிறுவன் சொன்னது எல்லாம் பலித்தது இல்லை. ஆகையால் பயமின்றி அனைவரும் ஒற்றுமையோடு வாழ்ந்து நம்முடைய உலகத்தின் முன்னேற்ற பாதைக்கு வழிவகுப்போம் என பிளாக் ஷீப் விக்னேஷ் காந்த் அந்த வீடியோ பதிவில் கூறியிருக்கிறார்.