25.5 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.350.160.300.053

கழுத்து வலியால் அவதியா? அப்ப தினமும் செய்யுங்க…

பொதுவாக அனைத்து வலிகளிலும் மிகவும் தொல்லை தருவது கழுத்து வலி தான்.

இது இதயத்தில் இருந்து மூளைக்கும், மூளையில் இருந்து உடம்போடு மற்ற இடங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்கின்ற நரம்புகள் கழுத்து பகுதியில் தான் உள்ளது. அந்த நரம்புகள் பாதிப்புக்குள்ளாகும்போது தான் கழுத்து வலி ஏற்படுகிறது.

முக்கியமாக கணினி முன் வேலை செய்வோருக்கு தான் கழுத்து வலியில் இருந்து அனைத்து வகையான வலிகளும் வரும்.

எனவேஇந்த தொல்லைமிக்க கழுத்து வலியில் இருந்து விடுபட கீழ் சொல்ப்படும் பயிற்சியை செய்தாலே போதும். இதிலிருந்து எளிதில் விடுபடலாம். தற்போது அந்த பயிற்சியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

625.0.560.350.160.300.053
  • கழுத்தை ஒருபக்கமாக சாய்த்து 5 முதல் 7 விநாடிகள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  • அப்போது கழுத்தின் முதுகெலும்பு பகுதி நேராக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • பின்னர் கழுத்தை மெதுவாக மற்றொரு பக்கத்தை நோக்கி திருப்ப வேண்டும். இதுபோல் இருபக்கமும் கழுத்தை திருப்பி ஐந்து முறை செய்ய வேண்டும்.
  • தோள்பட்டை மீது கழுத்தை நன்றாக சாய்த்து ஐந்து விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுத்தை நேராக நிமிர்த்த வேண்டும்.
  • பின்பு மறுபுறம் கழுத்தை வளைத்து 5 விநாடிகள் அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த பயிற்சியை குறைந்தது ஐந்து முறை செய்ய வேண்டும்.
  • கழுத்தை நேராக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கழுத்தை முன் நோக்கி தள்ள வேண்டும்.
  • அப்போது தோள்பட்டையின் இரு பகுதிகளையும் பின்னோக்கி இழுத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • ஐந்து விநாடிகள் இந்த நிலையிலேயே வைத்திருந்தால் கழுத்து தசைகளில் நெகிழ்வு ஏற்படும்.
  • சரியான நிலையில் அமர்ந்திருப்பதும், நன்றாக தூங்குவதும் கழுத்துவலி வராமல் தடுக்க உதவும்.