24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
3 fiberfoods 1518512080

அற்புதமான எளிய தீர்வு! ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவோம்!..கிருமிகளை விரட்டியப்போம்!…

உலகமெங்கும் கொரானா தொற்று வேகமாக பரவி வந்துகொண்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் எந்த நோயையும் எதிர்த்து போராடும் சக்தி நமக்கு கிடைக்கும்.

உடலில் அக்கறை இல்லையென்றால் அது பிற்காலத்தில் நமக்கு பெரிய பிரச்சினைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

உடலையும், உள்ளத்தையும் பேணி காக்கணும்ன்னு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ நாம் உண்ணும் உணவுகளை நன்றாக தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

நாம் சத்தான உணவுகளை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அந்த வகையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை பற்றி பார்ப்போம்.

ஓட்ஸ்

ஓட்ஸ் உடலில் கார்ப்ஸின் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் ஆற்றல் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் உடல்நிலை ஆரோக்கியத்திற்கு ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

காலை உணவில் 1 முதல் 6 கிராம் ஃபைபர் (ஓட்ஸ் போன்றவை) உட்கொண்டவர்கள் சிறந்த மனநிலையையும் ஆற்றல் அளவையும் கொண்டிருக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள ஓட்ஸ் உதவி செய்கின்றது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. வாழைப்பழம் உண்பதால் டோபமைன் மற்றும் செரோடோனின் ஆகியவற்றை உருவாக்கி உடலுக்கு சக்தி தருக்கிறது.

டோபமைன், செரோடோனின் ஆகிய இரண்டும் உணர்வு, நல்ல நரம்பியக்கடத்திகளாக செயல்படுகின்றன.

மேலும், வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடுவதால் சர்க்கரையை படிப்படியாக இரத்த ஓட்டத்தில் வெளியேற்றுகிறது. உடல் வலிமையாக இருக்கும்.

பெர்ரி

பெர்ரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படாது. பெர்ரி உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பினோலிக் கலவைகளை பரவலாகக் கொண்டிருக்கிறது.

அவை அந்தோசயினின்களிலும் அதிகமாக உள்ளது. இது மனச்சோர்வின் அபாயத்தை கிட்டத்தட்ட 40% குறைக்கின்றது.

நட்ஸ்

பாதாம், வேர்க்கடலை, முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் செரோடோனின் நல்ல மூலங்களாக விளங்குகின்றன. கொட்டைகள் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நல்ல சத்து கிடைக்கின்றன. உடல் ஆரோக்கியத்திற்கு இந்த நட்ஸ் வகைகள் மிகவும் துணை நிற்கின்றன.

கொழுப்பு நிறைந்த மீன்

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிகமாக காணப்படுகின்றன. சால்மன் மற்றும் டுனாவில் டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் மற்றும் ஈகோசாபென்டெனாயிக் அமிலம் ஆகியவை மீனில் நிறைந்துள்ளன.

மீன்களை வாரத்திற்கு 3 முறை உணவில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வைகள் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன்படுகிறது.