25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.0 3

டிக்டாக் இளைஞரால் கதறி பிக்பாஸ் அபிராமி..

கடந்த ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் 3 சீசன் சிறப்பாக முடிந்தது. இந்நிகழ்ச்சியில் காதல், சண்டைகள், கிசுகிசுக்கள், வதந்திகள், கை வெட்டுக்கள் அனைத்தும் நிகழ்ந்தன. பல காதல் கதைகள் அரங்கேறிய பிக்பாஸ் 3 சீசனில் அபிராமியும் சிக்கினார். முதலில் கவினிடம் க்ரஷாக இருந்த அபிராமி சில நாட்களுக்கு பிறகு கவின் அபிராமியை கண்டுகொள்ளாமல் லாஸ்லியாவிடன் சென்றார்.

அதன்பின் கவினை வெறுப்பேற்ற முகேனிடம் நட்பாக பழகினார். இதனால் முகேனுக்கும் அபிராமிக்கும் இடையே சகபோட்டியாளர்களால் வதந்திகள் பரவியது. இதனை முகேன் நாங்கள் இருவரும் நண்பர்கள், நான் ஏற்கனவே காதலில் இருக்கிறேன் என்று ஓப்பனாக கூறினார். இதன்மூலம் உண்மையிலேயே முகேனிடம் காதலில் விழுந்துள்ளேன் என்று சாக்‌ஷியிடமும் வனிதாவிடமும் கூறினார் அபிராமி.

இதையடுத்து பிக்பாஸ் சீசன் முடிந்து இருவரும் பிரிந்து சென்றனர். தற்போது அபிராமி சமுகவலைத்தளத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்து ரசிகர்களிடம் பேசி வருகிறார். இதற்கிடையில் காதலர் தினத்தன்று அபிராமி இன்ஸ்டாகிராமில் முகேனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவில் ஐ லவ் யூ பேபி என்று பதிவிட்டு வெளியிட்டிருந்துள்ளார்.

அந்த வீடியோ சமுகவலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இதை கண்ட அபிராமி அந்த வீடியோ வெளியானது என்னுடைய இன்ஸ்டா அக்கவுண்ட் இல்லை என்று கூறியுள்ளார். இந்த போலியான கணக்கில் இருப்பது யார் என்று தேடி போலிசில் புகார் அளித்து உள்ளே தள்ளுவேன் என்று கூறி சபதம் விட்டுள்ளார் அபிராமி.