25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
vijayj

அடேங்கப்பா! இதுவரை பார்த்திராத விஜய்யின் புதிய லுக்.. லைக்ஸ் அள்ளும் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பிகில். தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவிலும் இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே.

vijay 02j

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு காத்துக் கொண்டிருக்கிறது. கொரானா பிரச்சனையின் காரணமாக கடந்த வாரம் வெளியாக வேண்டிய திரைப்படம் தள்ளிச் சென்றது.

vijay 01j

இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக விஜய்யின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இந்திய அளவில் ட்ரண்ட் அடித்து வருகிறது.

vijay 03j

தளபதி விஜய்யின் PA ராஜேந்திரன் அவர்களின் மகள் திருமணத்திற்கு விஜய் சென்றிருந்த போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay keerthy

அதுமட்டுமில்லாமல் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் வரலட்சுமி போன்றோரும் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் வருகின்றன. அனேகமாக இந்த புகைப்படங்கள் சர்கார் படத்தின்போது இந்த நிகழ்வுக்கு நடந்திருக்கலாம் எனவும் தெரிகிறது.

எது எப்படியோ சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களை குஷிபடுத்தும் விதமாக விஜய்யின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.