24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Priya Bhavani

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

கூந்தல்  வளர்ச்சியை   அதிகரிக்க நீங்கள்  எந்த அளவிற்கு முடியை   பராமரிக்கிறீர்களோ, அதே அளவிற்கு  உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்துக்கள்   மற்றும் சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதே, உங்கள் கூந்தலை   சரியாக வளர செய்ய உதவும் முதல் படியாகும். கீழே தரப்பட்டுள்ள   இந்த உணவுகள் கூந்தலின் வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவுகிறது. அதைப்பற்றி   இங்கு காண்போம்.

வெங்காயம் 

பெரிய வெங்காயம்  ஒன்று, அதனுடன் சிறிதளவு   தேன் மற்றும் கொஞ்சம் ரோஸ்  வாட்டர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த  கலவையை உங்கள் உச்சந்தலை முதல் அனைத்து இடங்களிலும்   கூந்தலை சிறிது, சிறிதாக பிரித்து தடவி விட வேண்டும். பின்பு  ஒரு மணி நேரம் வரை கூந்தலை ஊற வையுங்கள். பின்பு முடியை அலசிக்  கொள்ளலாம். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் நன்கு  வளர்ச்சி பெறும்.

உருளைக் கிழங்கு 

உருளைக்கிழங்கை  தோல் சீவி கிழங்கை   மட்டும் மசித்து கொள்ள  வேண்டும். பின்பு அதனுடன் சிறிதளவு  தேன், ஒரு முட்டையின் மஞ்சள் கரு மற்றும்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கூந்தல்   முழுவதும் தடவி விட வேண்டும். தலையின் ஸ்கால்ப்   வரை அப்ளை செய்யலாம். பின்பு அரை மணி நேரம் வரை  கூந்தலை ஊற வையுங்கள். அடுத்து அதிகம் ரசாயனம் இல்லாத  ஷாம்பூ போட்டு கூந்தலை அலசிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு   இருமுறை செய்து வந்தால், கூந்தல் நன்கு வளர்ச்சி பெறும்.Priya Bhavani

 பூண்டு

பூண்டுச்சாறினை கூந்தலின்  வேர்க்கால்களில் படும்படி தேய்த்து  வந்தால் கூந்தல் நன்கு வளர்ச்சி பெறும்.  இதை வாரத்திற்கு மூன்று முறை தேய்த்து வந்தால், முடி  நன்கு வளர்ச்சி பெறும். இதற்கு மூலிகை ஷாம்பூ போட்டு குளிப்பது நல்லதாகும்.

கொத்தமல்லி 

பிரஷ் -ஆக   இருக்கும் கொத்துமல்லி  இலைகளை அரைத்து சாறு எடுத்துக்  கொள்ள வேண்டும். அதை கூந்தல் முழுவதும்  அப்ளை செய்ய வேண்டும். அரை மணி நேரம் வரை   கூந்தலை ஊற வைக்க வேண்டும். பின்பு கூந்தலை அலசிக்  கொள்ளலாம். இதை வாரம் ஒருமுறை செய்து வந்தால் கூந்தலுக்கு  நல்ல வளர்ச்சி கிடைக்கும்.

கேரட் 

கேரட்டை   பெரிதாக நறுக்கி   தண்ணீரில் வேக வைத்துக்  கொள்ளுங்கள். பின்பு வேக வைத்த  தண்ணீர் கொண்டு கேரட்டை அரைக்க  வேண்டும். இதை கூந்தல் முழுவதும் அப்ளை  செய்யுங்கள். ஒரு மணி நேரம் வரை கூந்தலை  ஊற வைக்க வேண்டும். பின்பு கூந்தலை மூலிகை   ஷாம்ப்பு கொண்டு அலசிக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு   ஒரு முறை செய்து வந்தால், கூந்தல் கருமையாகவும், நீளமாகவும்  வளரும். இயற்கையாக செய்யும் இந்த அழகு குறிப்புகளை நீங்களும் வீட்டில்  ட்ரை செய்து பாருங்கள் தோழிகளே!