28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
medium thumb

தனது மனைவியை பிரிந்தார் நடிகர் அர்ஜுன்?

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் அவரது மனைவி மெஹர் ஜெசியாவை விட்டுப் பிரிந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் மெஹர் ஜெசியா இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 21 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் மெஹர் ஜெசியா இவர்கள் இருவருக்குள் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவாகரத்து செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக இருவருமே அறிவித்திருந்தனர்.

ராம்பால் மற்றும் மெஹர் ஜெசியா தம்பதியினரின் விவாகரத்து செய்தி பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுபற்றி பேசிய மெஹர் ஜெசியா நாங்கள் இருவரும் உறவால் பிரிந்தாலும் எங்களது குழந்தைகளின் விஷயத்தில் சேர்ந்த முடிவு எடுப்போம். திருமண உறவு வேண்டுமென்றால் முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம் ஆனால் குழந்தைகள் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலம் குறித்து அக்கறையாக இருப்போம் எனவும் அவர் கூறினார்.medium thumb

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசனுக்கும், அர்ஜுன் ராம்பாலுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான பழக்கத்தால் தான் நடிகர் அர்ஜுன் ராம்பால் மற்றும் அவரது மனைவி மெஹர் ஜெசியா ஆகிய இருவரும் விவாகரத்து வரை சென்று உள்ளனர் என்று பாலிவுட் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.