27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
main 7 1559

ஏப்ரல் 29ந் தேதி இன்னும்மோ் பேராபத்து..! எச்சரிக்கும் நாசா..! உலகம் அழியும் அபாயம்..!

பூமியை நோக்கி 4 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள விண்கல் தாக்கப்போவதாக நாசா வெளியிட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூரிய உலகத்தில் உலோகங்கள், கற்கள் ஆகியவை எண்ணற்ற அளவில் குவிந்துகிடக்கும். இவை புவியீர்ப்பு விசையின் காரணமாக மிக அதிகமான வேகத்தில் பூமியை வந்தடையும். இத்தகைய பொருட்களே “விண்கற்கள்” என்று அழைக்கப்படுகின்றன. மேலும், இவை மிகவும் வேகமாக பூமியை நோக்கி வருவதால் பூமியை தாக்கும் அபாயம் மிக அதிகளவில் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுவர்.

அதே போன்று வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதியன்று பூமியை நோக்கி விண்கல் ஒன்று வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு நாசா விஞ்ஞானிகள் 52768 என்று பெயரிட்டுள்ளனர். அதாவது இந்த விண்கல் சுமார் 4 கிலோமீட்டர் பருமனானது என்றும், மணிக்கு 31,320 கிலோ மீட்டர் வேகத்தில் பாயக்கூடுமென்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதே வேகத்தில் பூமியை தாக்கினால் பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருக்கணும் இதுவரை வந்த விண்கற்கள் பூமியை நெருங்கும் போது பருமன் குறைந்து, வேகம் குறைந்து கிட்டத்தட்ட செயலிழந்து போகும் வகையிலேயே இருந்துள்ளனவாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவ்வகையில், இந்த விண்கல்லும் பூமியை நெருங்கி நின்றபோது வேகம் குறைந்து காணப்படும் என்றும், இதனால் பேரழிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று சில அறிவியலாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்தே உலகம் மீளமுடியாத நிலையில் இருக்க, இது போன்ற அறிவியல் துன்பங்கள் நேர்ந்தால் மனிதகுலத்திற்கு பேரழிவு ஏற்படுவது நிச்சயம் ஆகிவிடும் என்று கூறினால் அது மிகையாகாது.