27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
933155350374ce4204c868291fd407beb19e76c670a0a58a4d4a555798f096c66542450e6403254637691684273

துவைத்தெடுத்த ஸ்ரீபிரியா!இதெல்லாம் கண்ணுக்கு தெரியலையா பாண்டே..

 “உலக அதிசயத்தில்‌ ஒரு பத்திரிக்கையாளரான நீங்கள்‌ எப்படி கமா மற்றும்‌ முற்றுப்புள்ளி என்று எதுவும்‌ வைக்காது ஒரு பக்கமாக பேசினீர்களே… அது பத்திரிகை தர்மமா… இந்த தொற்றிற்க்கு கோவிட்‌19 என்ற பெயர்‌ ஏன்‌ வந்தது? ‘அவர்‌ வீட்டில்‌ பால்கனி இல்லையா ?’ அந்த மாதிரி பத்திரிக்கைகாரன்‌ நான்‌ இல்லை, இந்த மாதிரி பத்திரிக்கைகாரன்‌ நான்‌இல்லை என்று நீங்களே பெருமைப்பட்டுக்கொள்வது வேடிக்கை! இதற்கு பெயர்‌ தன்னடக்கமா? சுனாமியைப்போல்‌ கொரோனாவும்‌ ஓர்‌ காலை திடீரென்று தான்‌ நம்‌ நாட்டிற்குள்‌ வந்ததா?” என்று மக்கள் நீதி மய்யம் சார்பாக ஸ்ரீபிரியா ரங்காஜ் பாண்டேவுக்கு காட்டமான ஒரு லட்டரை எழுதி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் பிரதமருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.. இப்படி ஒரு கடிதம் இதுவரை யாராவது எழுதியிருப்பார்களா? அல்லது பிரதமர் மோடிக்கு எதிராக இத்தனை கேள்விகளை எழுப்பியிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.. ஏனெனில் எதிர்க்கட்சிகள்கூட பிரதமரின் சில முக்கிய அறிவிப்புக்கு செவிசாய்த்து வரும் நிலையில், கமல்ஹாசன் எழுதிய கடிதம் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

933155350374ce4204c868291fd407beb19e76c670a0a58a4d4a555798f096c66542450e6403254637691684273

பண மதிப்பிழப்பு எப்படி திட்டமிடப்படாமல் நடத்தப்பட்டதோ, அதேபோல் ஊரடங்கும் சரியாகத் திட்டமிடப்படவில்லை, அடித்தட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படவில்லை போன்ற பல விஷயங்களை கமல் சுட்டிக்காட்டியதை இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.கருத்து
துணிச்சல்

முதன்முறையாக ஒருவர் மிகத் தெளிவாக தனது தரப்பு கருத்துகளை ஆணித்தரமாக நச்சென எடுத்துரைத்துள்ளார் எனப் பலரும் தெரிவித்தனர். கமலின் துணிச்சல் மீண்டும் ஒருமறை நிரூபணமாகி உள்ளதாக கூறப்பட்டது.. ஆனால் இதற்கு பாஜக தரப்போ கொந்தளித்துவிட்டது.. எஸ்விசேகர் தனது ட்விட்டர் பதிவில், “இவ்வளவு பெரிய லெட்டரை மோடி படிக்கிறதுக்குள்ள கரோனாவே உலகத்தை விட்டு போயிடும்” என்றார்.. காயத்ரி ரகுராம் முதல் மூத்த தலைவர் எச்.ராஜா வரை கமல் கடிதத்தை விமர்சனமும் செய்து வருகிறார்கள்.

 

ரங்கராஜ் பாண்டே
பாண்டே

இவர்களைபோலவே, ரங்கராஜ் பாண்டேவும், “எந்த தரவுகளும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எப்படி குற்றம் சாட்டலாம்” என்று மோடிக்கு ஆதரவு தெரிவித்து பதிலடி தந்திருந்தார். இதில் ரங்கராஜ் பாண்டேவுக்குதான் மக்கள் நீதி மய்யம் நெத்தியடி கேள்விகளை கேட்டுள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஸ்ரீபிரியா ஒரு பக்கமும், மய்யம் சார்பில் மற்றொரு பக்கமும் என ஒன்றுக்கு ரெண்டாக பாண்டேவிடம் கேள்வி கணைகளை சரமாரியாக தொடுத்துள்ளனர்!

கடிதம்
ஸ்ரீபிரியா

இதில், ஸ்ரீபிரியா எழுதிய கடிதம் சற்று காரமாகவே உள்ளது.. “தமிழராக இல்லாதபோதும்‌, தெளிவான தமிழில்‌, தந்தி தமிழ்‌ தொலைக்காட்சியின்‌ நெறியாளராக. உங்கள்‌ மீது எனக்கு மரியாதை அதிகம்‌. இப்படி தான்‌ நானும்‌ இந்த கடிதத்தை துவங்கியிருக்க வேண்டும்‌.

கோபம்
அறிவாளி

உண்மையில்‌ எப்போதும்‌ உங்கள்‌ மீது எனக்கு கோபம்‌ உண்டு. கேள்வி கேட்கும்‌ இடத்தில்‌ அமர்ந்திருப்பவர்‌ தான்‌ அறிவாளி, பதில்‌ சொல்லும்‌ இடத்தில்‌ அமர்ந்திருப்பவர்‌ அறிவற்றவன்‌ போல்‌, கேள்வியை கேட்டுவிட்டு பதில்‌ சொல்ல விடாமல்‌ தொடர்ந்து இடைமறிக்கும்‌ பண்பை புழக்கத்தில்‌ கொண்டூ வந்தவர்‌ நீங்கள்‌ என்பதால்‌! கேள்வி கேட்பவர்‌ புத்திசாலி என்றால்‌ பதில்‌ சொல்ல அமர்ந்திருப்பவரும்‌ புத்திசாலி என்று மதிப்பவன்‌ தான்‌ உண்மையான அறிவாளி! சரி. நம்‌ பாரத பிரதமருக்கு எம்‌ தலைவர்‌ எழுதிய கடிதத்திற்கு உங்கள்‌ விமர்சனம்‌ பார்த்தேன்‌. நீங்கள்‌ பேசிக்கொண்டிருக்கும்‌ போது இடை மறிக்கவோ தடை விதிக்கவோ யாரும்‌ இல்லாதது உங்களுக்கு மிக செளகரியம்‌.

சலங்கை
சுனாமியா?

சும்மாவே ஆடுபவருக்கு சலங்கை கட்டிவிட்டால்‌? ஜனக்‌ ஜனக்‌ பாயல்‌ பாஜே தான்‌. மூச்சு விடாமல்‌ பேசுகிறீர்கள்‌? பேட்‌ பண்ண ஆள்‌ இல்லாத போது பால்‌ போட்டூவிட்டு அவுட் என்று கத்துவது போல்‌ உள்ளது. உங்களுக்கு எப்போதுமே நீங்கள்‌ சொல்வது மட்டுமே உண்மை என்ற ஒரு மனப்பான்மை. உங்கள்‌ statistical கேள்விகளுக்கு பலர்‌ பதில்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கிறார்கள்‌, பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்‌! எனக்கு உங்களிடம்‌ சில கேள்விகளே. 1. சுனாமியைப்போல்‌ கொரோனாவும்‌ ஓர்‌ காலை திடீரென்று தான்‌ நம்‌ நாட்டிற்குள்‌ வந்ததா?

படித்தாரா?
பால்கனி இல்லையா?

2. பிரதமர்‌ அவர்கள்‌ தமிழில்‌ வந்த கடிதத்தை தான்‌ படித்தாரா? (வாழ்க தமிழ்‌!) 3. நம்மவர்‌ எந்த குடிசை வீட்டில்‌ வாழ்ந்தார்‌ என்று கேட்டிருக்கின்றீர்கள்‌. குடிசையில்‌ வாழ்கின்றவர்களின்‌ மனதில்‌ வாழ்கின்றார்‌. அந்த எளிய மக்களுக்காக குரல்‌ கொடுப்பார்‌. நாட்டிற்கு முக்கியமான கேள்வி ஒன்றை கேட்டிருக்கின்றீர்கள்‌. அதற்கு விடை கிடைத்து விட்டால்‌ கொரோனாவிற்கு தீர்வு கிடைத்து விடூம்‌ போலும்‌.’அவர்‌ வீட்டில்‌ பால்கனி இல்லையா?’ என்பது 4, அந்த மாதிரி பத்திரிக்கைகாரன்‌ நான்‌ இல்லை, இந்த மாதிரி பத்திரிக்கைகாரன்‌ நான்‌இல்லை என்று நீங்களே பெருமைப்பட்டூக்கொள்வது வேடிக்கை! இதற்கு பெயர்‌ தன்னடக்கமா?

தர்மமா?
கொரோனா தொற்று5. உங்கள்‌ கூற்றுப்படி உலக அதிசயத்தில்‌ ஒரு பத்திரிக்கையாளரான நீங்கள்‌ எப்படி கமா மற்றும்‌ முற்றுப்புள்ளி என்று எதுவும்‌ வைக்காது ஒரு பக்கமாக பேசினீர்கள்‌?அது பத்திரிக்கை தர்மமா? 6. பக்கத்து நாட்டுக்காரன்‌ டிசம்பர்‌ மாதம்‌ 8ம்‌ தேதி முதல்‌ பலரை கொரோனா என்னும்‌ தொற்றில்‌ தொலைத்துக்கொண்டிருந்த தகவல்‌ நமக்கு தாமதமாகத்தான்‌ வந்ததா?

விமர்சனம்
கூலிக்கு மாரடிக்க தெரியாது

சரி இந்த தொற்றிற்க்கு கோவிட்‌19 ) என்ற பெயர்‌ ஏன்‌ வந்தது சொல்லுங்கள்‌ பார்ப்போம்‌? உங்கள்‌ விமர்சனங்களுக்கு எனக்கும்‌ மூர்ச்சை அடக்கி பதில்‌ வசனம்‌ பேசத்தெரியும்‌. எப்போதும்‌ நீங்களே கேள்வி கேட்டதாக இருக்கக்கூடாது. அது மட்டூமின்றி எனக்கு கூலிக்கு மாரடிக்க தெரியாது. இனியாவது எதிரில்‌ மனிதரை அமர வைத்து, பின்‌ அவரை சாடுங்கள்‌!” என்றார் ஸ்ரீபிரியா.

மய்யம்
பரிசோதனை

இதேபோல மய்யம் சார்பில் பதிவிடப்பட்ட ட்வீட்களில், “மக்களை ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றதை ஏன் பாண்டே நீங்க குறிப்பிடவில்லை? பால்கனி என்பது பணக்காரர்களை குறித்த சொல் என்பது தெரிந்தும், தெரியாதது போல் ” பால்கனி” என சொன்னதை விமர்சனம் செய்யலாமா? டெல்லி கூட்டத்திற்கு அனுமதி தந்தது யார்? வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை முறையாக பரிசோதனை செய்யாமல் விட்டதை ஏன் பாண்டே சொல்லவில்லை?

திருவிழா
ராகுல்காந்தி

வடமாநிலங்களில் நடந்த திருவிழாக்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டதை ஏன் பாண்டே சொல்லவில்லை? 3 மாத இஎம்ஐ நிறுத்த சொன்ன வங்கிகளை வட்டி வசூலிக்க கூடாது என ரிசர்வ் வங்கி சொல்லாமல் விட்டது ஏன்? இதை ஏன் நீங்க சொல்லல? கொரோனா பற்றி முன்பே எச்சரித்த மன்மோகன், ராகுல்காந்தியை மத்திய அமைச்சர்கள் கேலி செய்தபோது அவர்களை எதுவுமே சொல்லாதது ஏன்? உபி, பீகார் மாநிலங்களுக்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு? வசதியாக மறந்துவீட்டீர்களா? மறைத்து விட்டீர்களா? தாங்கள் பத்திரிகைகாரர் என்று இன்றும் சொல்லி கொள்வதில் அர்த்தமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.