நச்சு வைரசுக்கு வில்லனாகவும், பல்வேறு நோய்களுக்கு நிவாரணமாக கருஞ்சீரகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
சலியால் ஏற்படும் கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நிவாரணியாகும்.
கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீர்க் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் தடிமனுக்கு நல்லது.
5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
கருஞ்சீரகத்தைக் காடி (vinegar) வினாகிரியுடன் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலி நின்றுபோகும்.
கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
வெள்ளைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் கலந்து சாப்பிட்டால் உடலிலிருந்து நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும்.
பாலூட்டும் தாய்மார் கருஞ்சீரகம் உண்பதால் பால் சுரப்பைக் கூட்டும்.
சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
கருஞ்சீரகத்தை நீருடன் அரைத்து நல்லெண்ணையில் கலந்து சிரங்கு, சொறி, தேமல் உள்ள இடங்களில் பூசி வர குணம் தெரியும்.
கருஞ்சீரகத் தூள், கொத்தமல்லித் தூள் இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட்டால் அல்லது கருங்சீரகத் துளை தயிரில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி குறையும்.
கருஞ்சீரகத்தை தேன் பானியில் ஊரப்போட்டு அதிகாலை வெறும் வயிற்றுடன் சாப்பிட்டால் ஞாபக சக்தி கூடும்.
கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.
சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணையம் (pancreas) எனப்படும் உடல் உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இவ்விதை மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது.
தலை முடி கொட்டுதல், இளவயதில் தலை முடி நரைத்தல் உள்ளவர்கள் கருஞ்சீரக எண்ணெய்யை நன்கு தேய்த்துவருவதால் இதனைத் தடுக்கமுடியும்.
கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” இன்று மருத்துவர்களால் கருஞ்சீரகம் தொடர்பாக கண்டறியப்பட்டுள்ள ஆய்வுகளுக்கு 1400 வருடங்களுக்கு முன்பு கூறப்பட்டதாகும். இதுவல்லாத இன்னும் பல நோய்களுக்கும் கருஞ்சீரகத்தில் நிவாரணி இருக்கின்றது.
கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை வரலாற்று நெடுகிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.