25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.0.560.350.160.300

இதோ எளிய நிவாரணம்! குமட்டலை தடுக்க வீட்டு கசாயம்!

அவரச உலகத்தில் எல்லாம் அவசர அவசரமாகவே வாழ்ந்து வருகிறோம். வேலைக்கு போகும் நேரத்தில் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வதில்லை.

அவசர அவசரமாக எதையோ சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடுகிறோம். வீட்டு வேலை செய்பவர்கள் இன்னும் மோசம். வேலையை செய்துகொண்டே காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை பார்ப்போம்.

சரியாக சாப்பிடாமல் இருப்பதால் உங்கள் உடலில் உள்ள வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமில சுரப்பை அதிகப்படுத்தி குமட்டலை ஏற்படுத்தி விடுகிறது. குமட்டல் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில் நாம் சாப்பிடும் உணவை உடைக்க வயிற்றினுள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தி ஆகிறது.

இப்படி உடைக்கப்பட்ட உணவு பிறகு ஆற்றலாக மாறுகிறது. இந்த ஆற்றல் தான் உடம்பிற்கு செலவழிக்கப்படுகிறது. இந்த நீண்ட செயல் தொடர்ந்து நடைபெற்று வரும். இப்பொழுது நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாமல் விட்டால் சமயத்தில் வெறும் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உற்பத்தி ஆக ஆரம்பித்து விடும்.

இப்படி உற்பத்தியான அமிலம் நம்முடைய உணவுப் குழாய் பகுதியில் எரிச்சலை ஏற்படுத்தி எதுக்களிக்கச் செய்கிறது.இதனால் நெஞ்செரிச்சல், குமட்டல் போன்றவை நமக்கு வருகின்றன.

இப்படியே சாப்பிடாமல் இருந்தால் குமட்டல் வரும். குமட்டால் என்பது நோய் வருவதற்கான ஓர் அறிவிப்பு ஆகும்.

குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இது செயல்படுகிறது.

உடலின் மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் அமைந்துள்ளது. இது தூண்டப்படும்போதுதான் வாந்தி நமக்கு வருகிறது. செரிமானமின்மை, வயிற்று புண், ஒவ்வாமை, காய்ச்சல் போன்றவற்றாலும் இந்த குமட்டலும் வாந்தியும் நமக்கு ஏற்படும்.

 

எலுமிச்சை:

எலுமிச்சையை பயன்படுத்தி குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம். இஞ்சி, சீரகம், எலுமிச்சை, தேன் இவற்றை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிய நெல்லிக்காய் அளவுக்கு இஞ்சி விழுதுடன், அரை ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்க வைத்து, இதை வடிகட்டி அதில் சிறிது எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால் குமட்டல், வாந்தி சரியாகும்.625.0.560.350.160.300

கறிவேப்பிலை:

கறிவேப்பிலையை பயன்படுத்தி வாந்தி, குமட்டல், வாதம், காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்தலாம். கறிவேப்பிலையின் காம்புகள். பெரிய நெல்லி இலையின் காம்புகள். வேம்பு இலையின் காம்புகள். முருங்கை இலையின் காம்புகள். இவற்றை ஒன்றாக சேர்த்து லேசாக தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, சிறிது மிளகு பொடி, சிறிதளவு சுக்கு பொடி, இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் குமட்டல் சரியாகும்.

சர்க்கரை-உப்பு நீர் கலவை:

சர்க்கரை மற்றும் உப்பு நீரின் கலவையை குடிப்பதன் மூலம் உடலை திறமையான செயல்பாட்டு வரம்புக்கு ஏற்றவாறு சமன் செய்து கொள்ள முடியும். இந்த பானம் உடல் நீர் வறட்சி அடையாதவாறு பாதுகாத்து சோர்வடையாமல் காக்கின்றன. இது ஒரு இயற்கையான எலக்ட்ரோலாக செயல்படுகிறது.

இஞ்சி:

 

ஒரு சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தினால் இஞ்சி வயிற்றின் எரிச்சலை போக்கி உடனடி நிவாரணத்தை தரும். இஞ்சி பித்தத்தை தடுக்கக் கூடியது, எனவே இது வாந்தியைக் கட்டுப்படுத்தி வயிறு பிரச்சனைகளிலிருந்து உடலை பாதுகாக்கிறது.