24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025

பிரசாந்தால் அசிங்கப்பட்டாரா அஜித் ? உண்மை என்ன ?

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். இவர் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் திரைப்பட 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றியை அடைந்துள்ளது. 90 காலகட்டத்தில் விஜய், அஜித்தை விட இவருக்கு ஏகப்பட்ட மவுஸ் இருந்தது. இடையில் சில வருடங்கள் நடிக்காமல் இருந்த பிரசாந்த் ‘சாகசம்’ படம் மூலம் மீண்டும் சினிமா உலகில் ரீ எண்ட்ரி கொடுத்தார். இடையில் அப்பப்போ தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் தொகுப்பாளர் உங்களுக்கு மாலை போட்டு அஜித்திற்கு மாலை போடாமல் இருந்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளிவந்தது. இதற்கு தல ரசிகர்கள் அன்று தலை குனிந்த அவர் இன்று தலயாக இருக்கிறார் என்றெல்லாம் கூறி இருந்தார்கள்.

இது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பிரசாந்த் அவர்கள் கூறியிருப்பது, இது வந்து ரசிகர்கள் ஆசை பட்டு செய்யவது. தல ரசிகர்கள் எனக்காக இப்படி செய்கிறார்கள் என்றால் எனக்கு சந்தோஷம் தான். அதில் அவருக்கும் மாலை போட்டு இருந்தார்கள். ஆனால், அந்த போட்டோவை அவர்கள் வெளியிடவில்லை. இதெல்லாம் வந்து ரசிகர்கள் அவர்கள் நடிகர்கள் மீது இருக்கும் பிரியத்தினால் செய்வது. இப்ப எனக்கு கூட இன்னமும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வீடியோவில் 18 : 50 நிமிடத்தில் பார்க்கவும்
என்னுடைய ரசிகர்கள் எனக்காக எல்லாம் செய்வார்கள். இதை பெரிய விஷயமாக ஆக்க வேண்டாம் என்று கூறினார். இதை தொடர்ந்து தொகுப்பாளர் விக்ரம் உங்களுடைய உறவினரா? சினிமா உலகிற்கு அவர் வரும்போது நீங்கள் உதவி செய்யாது இருந்தது குறித்து பல வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்று கேட்டார். அதற்கு பிரசாந்த் அவர்கள் கூறியிருப்பது, விக்ரம் என்னுடைய உறவினர் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பொதுவாகவே நான் சோசியல் மீடியாவில் வரும் வதந்திகளுக்கு பதில் அளிப்பதில்லை. ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வதந்திகள் எல்லாம் சோசியல் மீடியாவில் நிறைய இருக்கிறது. அதற்கெல்லாம் உட்கார்ந்து சொல்லமுடியாது. நம்மளுக்கு வேஸ்ட் ஆப் டைம் என்று கூறினார்.

தற்போது நடிகர் பிரசாந்த் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்தாதுன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ‘அந்தாதுன்’. இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கினார். இது காமெடி கிரைம் த்ரில்லர் படம். அந்தாதுன் படம் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. மேலும், இந்த படத்தின் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்று உள்ளார். இந்த படத்தை தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா இயக்க உள்ளார்.