28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025

அம்மாடியோவ்! அஜித்தின் பில்லா படத்தின் மொத்த வசூல், தயாரிப்பாளர் பெற்ற லாபம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தல அஜித் நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் பில்லா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரீமேக் படமான இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, நமிதா, பிரபு என இன்னும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர்.

ரூபாய் பதினெட்டு கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருந்தது. உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 43 கோடி வசூல் ( Tax போக ) செய்துள்ளது.

இதன் மூலம் தயாரிப்பாளருக்கு 13.25% லாபமும் விநியோகஸ்தருக்கு 41.75% லாபமும் கிடைத்துள்ளது.

அஜித்தின் திரைப்பயணத்தில் அவரை மிகவும் ஸ்டைலிஷான நடிகராகவும் முன்னணி நடிகராகவும் மாற்றிய திரைப்படம் பில்லா எனலாம்.