அனுபமாவின் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்! மார்பிங் போட்டோ பரவி வருவது!
பிரேமம் படத்தில் கியூட்டான ஒரு ரோலில் நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆன பிறகு அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் தேடி வந்தது. அதையும் அவர் பயன்படுத்திக்கொண்டார். தற்போது தென்னிந்தியாவின் நான்கு சினிமா துறைகளிலும் தடம் பதித்துவிட்டார் அவர்.
இந்நிலையில் தற்போது அனுபமாவின் முகநூல் கணக்கை மர்மநபர் ஹேக் செய்துவிட்டார். அதில் அனுபமா முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஒரு போலியான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
அது இணையத்தில் வைரலானது. அது போலியானது என இன்ஸ்டாகிராமில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார் அனுபமா. இந்த ஒரு முட்டாள் தனமான விஷயத்திற்காக இவ்வளவு நேரம் செலவிட்டீர்களா? வேண்டும் கேள்வி கேட்டுள்ளார் அவர்.
அனுபமாவின் பேஸ்புக் கணக்கு தற்போது நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. அனுபமாவிற்கு அது மீண்டும் கிடைக்குமா என்பதும் தெரியவில்லை.
மேலும் அனுபமாவின் மார்ப் செய்யப்பட்ட புகைப்படத்தை வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம் என அவரது ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.