28 C
Chennai
Wednesday, Nov 13, 2024
download 1

சூப்பர் டிப்ஸ் கெட்ட கொழுப்பினை குறைக்கும் பிஸ்தா !

பிஸ்தா அநேக சத்துக்களை உடையது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க பிஸ்தா உதவுகிறது. மேலும் என்னென்ன பயன்கள் உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.பிஸ்தா:- கொட்டைகள், விதைகள் இவைகளை குறிப்பிட்ட அளவு அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதில் பிஸ்தா கொட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் புரதசத்து, நார்சத்து, நோய் எதிர்ப்பு இவையே இதன் முக்கியத்துவத்துக்கு காரணம் ஆகின்றது.பிஸ்தா அநேக சத்துக்களை உடையது. ஒரு அவுன்ஸ் (அ) சுமார் 28 கி (அ) 48 பிஸ்தாக்களின் சத்தினை காணும் பொழுது.

கலோரி: 159
கார்ப்போஹைட்ரேட்: 8 கி
நார்சத்து : 3 கி
புரதம்: 6 கி
கொழுப்பு: 13 கி
பொட்டாசியம்: தினம் தேவையான அளவில் 6 சதவீதம்
விட்டமின்: 28 சதவீதம் அதே அளவு
மற்றும் தயமின், காப்பர், மன்கனீஸ் என பல சத்துகள் இதில் உள்ளன.

திசுக்கள், செல்கள் பாதிப்பினை தடுப்பதிலும் புற்று நோய் தவிர்ப்பிலும், பிஸ்தாவிற்கு பெரும் பங்கு உண்டு.கண் ஆரோக்கியத்தில் பிஸ்தாவிற்கு முக்கிய பங்கு உண்டு. வயது மூப்பின் காரணமாக கண் பார்வை இழத்தல் போன்ற பல பாதிப்புகளை வெகுவாய் குறைக்கின்றது.புற்றுநோய், இருதய பாதிப்பு இரண்டிலும் இருந்து காக்கிறது.பொதுவில் கொட்டை வகைகள் அதிக கலோரி சத்து கொண்டவை. ஆனால் மற்றவற்றினை விட பிஸ்தாவின் கலோரி சத்து நிறைவு.download 1

ரத்த குழாய்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றது.

எடை குறைப்பிற்கு உதவுகின்றது.

உணவுக் குழாயில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகின்றது.

கெட்ட கொழுப்பினை குறைக்கின்றது.

உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கிறது.

அதிக சர்க்கரை அளவு 20 முதல் 30 சதவீதம் வரை குறைகிறது.

உப்பு சேர்க்காமல் உண்பதே நல்லது.

இதனை சத்துக்கள் கொண்ட பிஸ்தாவினை அன்றாடம் ஒரு அவுன்ஸ் அளவாவது எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் அவரவர் உடல் நலப்படி மருத்துவர் ஆலோசனையும் பெற வேண்டும்.