25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
download

உங்களுக்கு இந்த சைலண்ட் வில்லியை ஞாபகம் இருக்கா?

சினிமா, சின்னதிரை என புகழ் வெளிச்சத்துக்கு வந்து விட்டால், ரசிகர்கள் நிச்சயம் பிரபலங்களின் செயல்பாடுகளை பின்பற்றுவதை வழக்கமாகக் கொள்வார்கள். சிலர் நடிப்பதை விட்ட பின்பும் கூட, அவர்கள் மீதான ரசிகர்களின் அன்பு மட்டும் குறையாது. அந்த வகையில், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை பிருந்தா தாஸ்.

 

சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’ என்ற பிரபல தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பிரபலமானார். கல்லூரியில் தான் ஆடிய நடனத்தை பார்த்துதான் பிரபல டி.டி.மெட்ரோ சேனலின் ‘நம் குடும்பம்’ என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இவர் நடித்த ஆனந்தம் தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பானது.

நீளமான கூந்தல், வரிசையாய் காதணி, நீள முகம், கூர்மையான மூக்கு இது தான் பிருந்தாவின் அடையாளம். ஆனந்தம் தொடரில் நடிகை சுகன்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு சமமான நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் பிருந்தா. சொந்த பெயரையே மறக்கும் அளவுக்கு அந்த அபிராமி கதாபாத்திரம் பெயர் பெற்று தந்ததாம்.

சின்ன வயதில் கிளாஸிக்கல் டான்ஸ் கத்துக்கிட்ட பிருந்தா, கல்லூரியில் படிக்கும் போது, அவர் ஆடிய நடனத்தைப் பார்த்து தான் ஆக்டிங் வாய்ப்பு வந்ததாம். டி.டி.மெட்ரோ சேனலின் ‘நம் குடும்பம்’, தான் பிருந்தாவின் முதல் சீரியல். அடுத்தடுத்து இருபதுக்கும் அதிகமான சீரியல்கள், மேடை நாடகங்களிளும் நடித்தார்.

’ஹாய் டா’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார் பிருந்தா தாஸ். அதன் பிறகு நடிப்புக்கு இடைவெளி விட்டு விட்டு, தற்போது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அபிராமி போன்று மனதில் நிற்கும்படியான கதாபாத்திரங்கள் கிடைத்தால், மீண்டும் நிச்சயம் நடிப்பேன் என்கிறார். பிருந்தாவின் மகன் கிஷேன் தாஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட விளம்பரப்படங்களில் நடித்துள்ளார். மகனுடன் சேர்ந்து ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்துள்ளார் பிருந்தா.

 

View this post on Instagram

 

We don’t take too many pictures but looks like that’s changing ?

A post shared by Kishen Das (@kishendas) on