29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
fg

அம்மாடியோவ் என்ன இது பிரபல ஹீரோக்களுக்கு சவால் விடுத்த நடிகை ஸ்ரேயா..!!

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா.

அதனை தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், விக்ரம், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும், பிரபல தொழிலதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கொரோனாவால் பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில், வீட்டில் நேரம் போக வேண்டும் என்பதற்காக விட்டு வேலைகளில் ஸ்ரேயாவுக்கு அவரது கணவர் உதவி செய்து வருகிறார்.

இதையடுத்து, சமீபத்தில் ஸ்ரேயா தனது கணவர் பாத்திரம் கழுவும் வீடியோவை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரை போல ஜெயம் ரவி, ஆர்யா, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல திரைபிரபலங்களுக்கும் பாத்திரம் கழுவும் சவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.