25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
156342

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும்.. மாரடைப்பை தடுக்கலாம்..!

மாரடைப்பு, பக்கவாதம் உள்ளவர்கள் தினமும் டையட்டுடன் வாழைப்பழம் சேர்த்துக்கொண்டால் அதன் வீரியம் குறையும் என ஆய்வில் வெளிவந்துள்ளது.

இதய நோய் வராமல் தடுக்க பொட்டாசியம் அதிகம் கொண்ட உணவை சாப்பிடச் சொல்வார்கள். அந்த பொட்டாசியம் அதிகம் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளதால், தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது இதய நோயை தடுப்பதும், பக்கவாதப் பிரச்சினையும் வராமல் தடுக்குமாம்.

பொதுவாக குறைந்த பொட்டாசியம் , அல்லது அதிக அளவிலான பொட்டாசியம் என இரு வகைகளாக இருக்கின்றனர். குறைந்த பொட்டாசியம் கொண்டவர்களின் இரத்தக் குழாய்கள் கடினமாவதால் இரத்த ஓட்டம் பாய்வது சிரமமாகிறது. அதிகமாக இருந்தால் அதன் உறுதித் தன்மையை குறைப்பதாக இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

எனவே வாழைப்பழம் சாப்பிடுவதால் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், இதய நோய் கொண்டவர்களுக்கு உதவும் என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வை இதற்கு முன் நடத்திய 11 ஆய்வுகளை சீராய்வு செய்தும், 250000 பேரை பங்குபெறச்செய்தும் நிகழ்த்தியுள்ளது.156342

மேலும், ஒரு நாளைக்கு பொட்டாசியத்தின் அளவு 1540 mg ஆக அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால் 21 சதவீதம் பக்கவாதம் ஏற்படுவதை குறைக்கலாம் என்கிறது. அதோடு இதயத்தின் துடிப்பையும் சீராக்கலாம்.

ஆக வாழைப்பழம் மட்டுமல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும் அனைத்து பழங்களுமே பொட்டாசியம் நிறைந்தது. அவற்றை தினமும் உங்கள் டையட் பிளானுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். நோயின்றி ஆரோக்கியமாக வாழ்க்கையை வாழுங்கள்.