அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சந்திக்கும் பிரச்னைகளுள் ஒன்றாகும்.
ஒரு நாளைக்கு எட்டு அல்லது ஒன்பதுஎன்பது முறை சிறுநீர் கழிப்பதே ஆரோக்கியமானதாகும். அதற்கு மேல் கழிக்க நேர்ந்தால் உங்கள் உடலில் பிரச்னை உள்ளது என்று அர்த்தம்.
அந்தவகையில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் என்ன? அதற்கு என்ன தீர்வு என்பதை பார்ப்போம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு என்ன காரணம்?
ஆல்கஹால் மற்றும் காபி அதிகமாகக் குடிப்பது ,சிறுநீரக பிரச்னைகள், சிறுநீர்ப்பை பிரச்னை , நீரிழிவு நோய், மன அழுத்தம், கர்ப்பம் , கவலை, சிறுநீர் பாதை தொற்று நோய் , சிறுநீர்ப்பை புற்றுநோய் , சிறுநீர்ப்பையில் கற்கள் இவை அனைத்து அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களாக கருதப்படுகின்றது.
தீர்வு
- சைப்ரஸ் எண்ணெய் 7 சொட்டுகள் மற்றும் தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி இது இரண்டு எண்ணெய்களையும் ஒன்றாகக் கலந்து, சிறுநீர் வெளியேறும் பகுதியில் மெதுவாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதை தினமும் செய்யலாம்.
- தண்ணீரில் நிரப்பப்பட்ட டிஃப்பியூசரில் (வாசானை பரப்ப உதவும் ஒரு கருவி) மூன்று முதல் நான்கு சொட்டு லாவெண்டர் எண்ணெய்யைச் சேர்க்கவும். பின்னர் அதிலிருந்து பரவக்கூடிய நறுமணத்தை உள்ளிழுக்கவும். இதை தினமும் 1- 2 முறை செய்யலாம்.
- அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும். நன்றாக கலந்த நீரைப் பருக வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை உட்கொள்ளலாம்.
- சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையாக்கவும் தயிர் உதவுகிறது. இதற்கு ஒரு கிண்ணம் தயிரை தினமும் உட்கொள்ளலாம்.
- 8-10 துளசி இலைகளைத் தண்ணீரில் அலசி அரைக்க வேண்டும். இந்த துளசி சாற்றை இரண்டு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு முறை உட்கொள்ளுங்கள்.
- ஒரு கப் குருதி நெல்லி சாற்றைத் தினமும் 1 முதல் 2 முறை குடிக்க வேண்டும். குருதி நெல்லி சாற்றில் இயற்கையாக நிகழும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புரோந்தோசயனிடின்கள் உள்ளன. இந்த சேர்மங்கள் எதிர்ப்பு மூலக்கூறுகளாகச் செயல்படுகின்றன.
- ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீத்தூள் சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும், பின்னர் சூடான கிரீன் டீயில் சிறிது தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள். தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடிக்கலாம். சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருந்தால் அதைக் குணப்படுத்தும்.
- வைட்டமின் சி சிறுநீர் பாதை நோய்த்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிர் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வைட்டமின் ஏ சிறுநீர்ப்பை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைசேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதை பருகலாம். தினமும் ஒரு முறை இதை உட்கொள்ளலாம்.
- முழு தானியங்கள், பார்லி, பழுப்பு அரிசி, பீன்ஸ், பட்டாணி, ஆப்பிள், முட்டைக்கோஸ் மற்றும் கேரட் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளும், ப்ரோக்கோலி, வெள்ளரி காய், காலே, கீரைகள், காய்கறிகள், மீன், முட்டை, கோழி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- கார்பனேற்றப்பட்ட பானங்கள்
- காபி மற்றும் டீ
- சாக்லேட்டுகள்
- சிட்ரஸ் பழங்கள்
- காரமான உணவுகள்
- தக்காளி
- சர்க்கரை
- தேன்
- வெங்காயம்