25.5 C
Chennai
Monday, Dec 23, 2024
625.500.560.350.160.300.053.8 4

தெரிந்துகொள்வோமா? மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோயை முன்னரே கண்டறிய சுய பரிசோதனை செய்வது அவசியமானது.

இந்த மார்பக சுய பரிசோதனையை ஆண் மற்றும் பெண் இருபாலருமே செய்து வருவது நல்லது.

18 வயது நிரம்பிய ஆண், பெண் இரு பாலருமே ஒவ்வொரு மாதமும் இந்த பரிசோதனையை செய்து வரலாம்.

அந்த வகையில் இதை எப்படி செய்யலாம் என்று தற்போது இங்கு பார்ப்போம்.

  • முதலில் வலது மார்பகத்தை இடது பக்கமாக சுழற்றுங்கள். உங்கள் வலது கையை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். இடது கையை கொண்டு சுழற்றுங்கள்.

  • உங்களுக்கு செளகரியமாக இருக்க வேண்டும் என்றால் முதுகிற்கு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் நடுவில் இருக்கும் மூன்று விரல்களை பயன்படுத்துங்கள். நடுவில் இருக்கும் மூன்று விரல்களை வைத்து சின்னதாக சுழற்சி கொடுக்கவும்.
  • ஒவ்வொரு சுழற்சியின் போதும் கொடுக்கப்படும் அழுத்தத்தை மாற்றுங்கள். இப்படியே 3 சுழற்சி களை செய்ய வேண்டும்.
  • ஒன்று மிதமாக, நடுத்தரமாக அப்புறம் ஆழமாக செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது திசுக்களை ஆராய முடியும். பிறகு மற்ற பகுதிக்கு செல்லுங்கள்.
  • அக்குள் பகுதியில் இருந்து உள்ளாடை விளிம்பிற்கு செல்லுங்கள். இப்பொழுது உங்கள் விரல்களை நல்ல அகலமாக விரித்துக் கொண்டு அக்குள் பகுதியில் இருந்து உள்ளாடை விளம்புகள் வரை மசாஜ் செய்து கொண்டே செல்லுங்கள். முழு பகுதியையும் உணர வேண்டும்.
  • உங்கள் விரல்களை எடுக்க வேண்டாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சுழற்சி செய்து மார்பக காம்பு வரை செல்லுங்கள்.625.500.560.350.160.300.053.8 4
  • அதன் பின் கீழே இருந்து செங்குத்தாக மற்றும் கிடைமட்டமாக நகர்த்தி கொடுங்கள்.
  • நீங்கள் முலைக்காம்பை அடைந்த உடன் உங்கள் தலையணையை எடுத்து விடுங்கள் செய்து விடுங்கள். அதே மாதிரி உங்கள் தலையில் இருக்கும் கையையும் எடுத்து விட்டுங்கள்.
  • பின் மேலும் கீழும் அம்புக்குறி செல்லும் திசையில் மசாஜ் செய்யுங்கள். ரொம்பவும் கசக்காமல் முன்பு செய்த அதே வட்ட இயக்கத்தில் இதைச் செய்யுங்கள்.
  • முலைக்காம்பு பகுதியை கவனமாக பார்க்க வேண்டும். இதே மற்ற மார்பக பகுதிகளையும் ஆராய வேண்டும்
  • அதே மாதிரி கழுத்தெலும்புக்கு கீழேயும் மேலேயும் செங்குத்தான நகர்வை ஏற்படுத்தி முழு பகுதியையும் ஆராயுங்கள். இதே போன்று வலது கையை பயன்படுத்தி இடது மார்பகத்திற்கு செய்ய வேண்டும்.
பார்வையிடுதல்
  • ஒரு கண்ணாடியின் முன் நிற்க வேண்டும். மார்பகத்தின் வடிவம், நிறம், சருமம் இவற்றையெல்லாம் பார்வையிட வேண்டும்.
  • முதலில் மார்பகத்தை ஒன்னுக்கொன்று ஒப்பிட வேண்டும்.ஒரு மார்பகத்தை விட மற்றொரு மார்பகம் திடீரென பெரிதாக இருக்கின்றதா என ஆராய வேண்டும்.
  • மார்பக சருமத்தில் சொறி, சிரங்கு, சிவந்து போதல், பக்கு, ஆரஞ்சு நிற சருமம் போன்றவை தோன்றி இருக்கின்றதா என பார்க்க வேண்டும்.
குறிப்பு
  • ஒவ்வொரு மாதவிடாய் காலத்தின் இறுதி நாட்களை மார்பக சுய பரிசோதனை செய்வதற்காக தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் கருவுற்று இருந்தால் மாதவிடாய் வராது அல்லது உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் அந்த மாதிரியான சமயங்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • இந்த பரிசோதனையை நீங்கள் குளிக்கும் போதோ அல்லது கைகளில் லோசன் போன்றவற்றை வைத்துக் கொண்டோ செய்யக் கூடாது.