கூந்தல் பராமரிப்பு

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை

 

தலை சீவும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்தலானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு வரும்.

கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்சருமமும் ஒன்றல்ல. ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்சருமத்தில் நன்குபடும்படி சீவினால் தலைச்சருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கால் நன்கு வளரும். இவ்வாறு தினமும் செய்தால் கூந்தலானது நன்கு ஆரோக்கியமாக வளரும்.

கூந்தலை முதலில் சீவ ஆரம்பிக்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் கூந்தலில் முடிச்சுகளானது முனையிலேயே அதிகமாக இருக்கும். ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சுகளை அகற்றிப் பின் ஆரம்பித்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லையென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.

மேலும் கூந்தலை இறுக்கமாக கட்டக்கூடாது. நிறையபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டுகின்றனர். கூந்தலை போனி டைல் போடக்கூடாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும். தினமும் இரவில் படுக்க போகும் முன்னால் எண்ணெய் தோய்த்து கூந்தலை நன்றாக வாரி சடை போட்டு கொள்ள வேண்டும். சீப்பு தலையில் நன்றாக பதியும் படி தலையை வார வேண்டும்.

Related posts

பளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ்

nathan

நம்மால் இழந்த முடியை மீண்டும் பெற கொத்தமல்லி இலை!…

sangika

கூந்தல் வளர, நரை மறைய

nathan

இளநரையா?

nathan

தலைமுடியை பராமரிக்க இயற்கை முறைகள்!….

sangika

தலை சீவும் போது கவனிக்க வேண்டியவை

nathan

தலை குளிர்மையாக இருப்பதற்கு

nathan

வீட்டிலேயே தயாரிக்கும் இந்த ஷாம்பூ வாரத்தில் பலமுறை பயன்படுத்தினாலும் கூந்தலுக்கு எந்த ஒரு எதிர்வினையையும் உண்டாக்குவதில்லை….

sangika

அடர்த்தியான தலை முடியை பெற

nathan