28.5 C
Chennai
Sunday, Dec 29, 2024
mankatha

புலம்பிய பிரபல நடிகர்.! மங்காத்தா படத்தில் நடிக்க இருந்தது அஜித் இல்ல….

தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மங்காத்தா. தல அஜித் வில்லனாக இப்படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

ஆனால் வெங்கட் பிரபு முதலில் இந்த படத்தை அஜித்தை வைத்து எடுக்க திட்டமிடவில்லையாம். அறிமுக நடிகர்கள் ஐந்து பேர் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து தான் இப்படத்தை எடுக்க இருந்தாராம்.

அவர்களில் ஒருவராக ஜெய் போலீஸ் வேடத்தில் நடிக்க இருந்ததாம். இந்த நிலையில் தான் அஜித் வெங்கட் பிரபுவிடம் கதை இருந்தால் கூறுங்கள் என கேட்க மங்காத்தா கதையை எதர்சசையாக கூறியுள்ளார்.

இந்தக் கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போக நானே நடிக்கிறேன் என கூறி புக் ஆகியுள்ளார்.

இதனால் ஜெய் நடிக்கவிருந்த வாய்ப்பு கை நழுவி உள்ளது. இது குறித்து நடிகர் ஜெய் அவர்களே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுங்க என கேட்டேன். ஆனால் அப்போது ராஜா ராணி படத்தில் பிஸியக நடித்து கொண்டு இருந்ததால் அதுவும் முடியவில்லை என புலம்பியுள்ளார்.