குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் கலக்கி வந்த அனிகா சுரேந்திரன் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித் மகளாக அறிமுகமானார். அடுத்து மா குறும்படம் மூலம் நடிப்பில் அசரடித்து கலக்கினார். விஸ்வாசம் படத்திலும் நயன்தாரா – அஜித் மகளாக கவனம் ஈர்த்தார். ஹெச்.விநோத் இயக்கும் அடுத்த அஜித் படத்திலும் மகளாகவே நடிக்க இருக்கிறார்.
14 வயதாகும் அனிகா எக்கச்சக்கமாக போட்டோ ஷுட் எடுத்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள், இந்தப்பொண்ணுக்கு 14 வயது தான் ஆகிறது. அதற்குள் ஹீரோயின் ஆசை வந்து ஆட்டிப்படைத்து வருகிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க இப்படி அநியாயத்துக்கு மாறிவிட்டார் எனக் குமுறுகிறார்கள்.