அதிக தாடி வளர்ப்பது சமீப காலங்களில் ஆண்களிடையே மிகுந்த வரவேற்பையும், ஆர்வத்தையும் பெற்றுள்ளது.
அந்தவகையில் பொதுவாக எல்லா ஆண்களுக்கு தாடி வளரக்க வேண்டும் ஆசை இருக்கும்.
சிலருக்கு எந்தவித பராமரிப்புகளுமின்றி தாடி தானாக வளரும். சிலருக்கு மரபணு காரணங்களால் முயன்றுதான் தாடி வளர்க்க வேண்டி இருக்கிறது.
இதற்காக விளம்பரங்களில் காட்டப்படும் கண்ட கண்ட எண்ணெய்களை வாங்கி போடுவதுண்டு.
இதனை தவிர்த்து இயற்கை பொருட்களை கொண்டு எளிய முறையில் கூட தாடியை வளர்க்க முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஆலிவ் எண்ணெய் 6 ஸ்பூன், யூக்கலிப்டஸ் எண்ணெய் 3 சொட்டு, இரண்டையும் கலந்து நன்குக் குலுக்குங்கள். இந்த எண்ணெய்யை தாடையில் தேய்த்து 30 நிமிடங்கள் காத்திருங்கள். அதன்பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர தாடி விரைவில் வளரும்.
- ஒரு முழு தேங்காய் எண்ணெய் பாட்டிலில் 10 சொட்டு ரோஸ்மெரி எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் தூங்கும்முன் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ தாடி நன்கு வளரும்.
- பாதாம் எண்ணெய்யுடன் யூக்கலிப்டஸ் மற்றும் டீ ட்ரீ எண்ணெய் ஆகிய இரண்டையும் இரண்டு சொட்டு கலந்து நன்குக் குலுக்குங்கள். தாடைகளில் தடவி 15 நிமிடங்கள் காத்திருந்து பின் கழுவுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
- 20 ml பாதாம் எண்ணெய்யுடன் 5 ml ஜோஜோபா எண்ணெய் கலக்குங்கள். அடுத்ததாக 2-3 சொட்டு ஆரஞ்சு எண்ணெய் மற்றும் எலுமிச்சை எண்ணெய் கலக்குங்கள். இதை தொடர்ந்து தாடை மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேய்த்துவர தாடி நன்கு வளரும்.