நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளது.
இதையடுத்து கணவன் மனைவி இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த மனக்கசப்பு பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மாறியது. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி மக்கள் மனதில் இடம் பிடித்தார் நித்யா. தினமும் காலையில் குட்மார்னிங் சொன்னது மூலம் அவரது மகள் போஷிகாவும் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பலரும் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மகள் போஷிகா
வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எப்படி முககவசம் தயாரிப்பது என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை நித்யா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்து நீங்களும் கற்று பயன்பெறுங்கள்…