25.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
NTLRG 2020040

இந்திய நடிகை ஸோவா மொரானிக்கு கொரோனா பாதிப்பு

பிரபல பாலிவுட் நடிகை ஸோவா மொரானி. சென்னை எக்ஸ்பிரஸ், திவ்வாலே, ஹேப்பி நியூ ஈயர், ரா ஒண் உள்ளிட்ட பிரமாண்ட படங்களை தயாரித்த கரீம் மொரானியின் மகள். இவர் ஆல்வேஸ் கபி கபி, மஸ்தான், பாக் ஜானி படங்களில் நடித்தார்.

அகூரி, பூத்பூர்வா ஆகிய வெப் சீரிசிலும் நடித்துள்ளார்.ஸோவா மொரானியின் சகோதரி, கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு மும்மையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.NTLRG 2020040