உலகம் முழுவதும் கொரானா பாதிப்பால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை சரிப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் சினிமாவில் தின கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் வகையில் கலைஞர்களிடம் முடிந்த அளவு உதவி செய்யுமாறு பெப்ஸி யூனியன் சங்கத்தலைவர் ஆர்கே செல்வமணி கோரிக்கை வைத்தார்.
அதன்படி பல நடிகர்கள் தொடர்ந்து தங்களது உதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை 2 கோடியே 45 லட்சம் வரை பணம் மற்றும் 2400 மூட்டை அரிசி ஆகியவை கிடைத்துள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் செல்வமணி தெரிவித்துள்ளார்.
பணம் கொடுத்தவர்களின் லிஸ்ட் :
ரஜினிகாந்த் 50 லட்சம், அஜித் 25 லட்சம், நயன்தாரா 20 லட்சம், தனுஷ் 15 லட்சம், சூர்யா குடும்பம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி,கமல், ஷங்கர், மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் தலா 10 லட்சம் கொடுத்துள்ளனர்.
போனி கபூர் 5 லட்சம், ஏஜிஎஸ் புரோடக்சன்ஸ் 15 லட்சம், குஷ்பூ சுந்தர் சி 5 லட்சம் கொடுத்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு, கார்த்திக் சுப்புராஜ், ஆர்கே சுரேஷ் ஆகியோர் தலா ஒரு லட்சம் கொடுத்துள்ளனர்.
தயாரிப்பாளர்களில் தாணு உள்ளிட்ட பலர் அரிசி மூட்டைகளை கொடுத்து உதவி செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமான நிகழ்ச்சி என்னவென்றால் ஒரு நடிகர் 25 லட்சம் பணம் கொடுத்து விட்டு தன்னுடைய பெயரை கூற வேண்டாம் எனக் கூறியது சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ரூபாய் உதவி செய்தால்கூட விளம்பரம் தேடிக்கொள்ளும் இந்த உலகில் 25 லட்சம் கொடுத்து விட்டு தன்னுடைய பெயரை கூற வேண்டாம் என்று கூறியது அவரின் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. விரைவில் அவர் யார் என்று செய்தி வெளிவரும் என காத்துக் கொண்டிருக்கிறோம்.
ஒரு வேலை சமீபத்தில் நடந்த ரெய்டு காரணமாக 25 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு தன்னுடைய பெயரை வெளியில் சொல்ல வேண்டாம் என விஜய் சொல்லிவிட்டாரா எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
இருந்தாலும் மற்ற மாநில நடிகர்கள் கோடிக்கணக்கில் தங்களுடைய தொழிலாளர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வேலையில் நம்ம ஊர் நடிகர்கள் லட்சங்களுக்கு திண்டாடுகின்றனர். தனக்கு போகத் தான் தானமும் தருமமும் என்பதில் உறுதியோடு இருக்கிறார்கள் போல.