30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
1826702657b374df4ff8fd3bcf1d343e157be61441fec8e2300f70eaa48483d081a453e6d

சூப்பர் டிப்ஸ்! காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் சாப்பிடுவதால்…??

நம் சமையல் அறையில் ஒரு மினி மெடிக்கல் ஷாப்பே உள்ளது. ஆனால், அதை எல்லாம் நாம் புறக்கணித்துவிட்டு, ரசாயனத்தால் ஆன, உடனடி மேஜிக் போல் தீர்வு கிடைக்கக் கண்டதையும் நாடிக்கொண்டிருக்கிறோம். ஏலக்காய் குடிநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்வது உண்டு. ஆனால் யாருக்கும் இப்போது ஏலக்காய் குடிநீரை அருந்த நேரம் இல்லை. சமீபத்தில், நிஷா ர்மா என்ற பெண்மணி தினமும் ஏலக்காய் குடிநீரை அருந்தியிருக்கிறார். அதன் மருத்துவப் பலன்களைத் தற்போது அவர் வெளியிட்டுள்ளார். அவற்றைத் தெரிந்துகொள்வோமா.

1826702657b374df4ff8fd3bcf1d343e157be61441fec8e2300f70eaa48483d081a453e6d5863323685606631285

“நான் டெல்லியில் வசிக்கிறேன். குளிர்காலம் வந்தாலே பெரும்பாலும் தண்ணீர் அருந்துவது குறைந்துவிடும். அந்தப் பழக்கம் எனக்கும் இருந்தது.

குளிருக்கு இதமாகக் கனமாக ஆடை, அவ்வப்போது சூடான டீ என்று இருந்தேன். விளைவு, சருமத்தில் சுருக்கம், பொலிவின்மை, கண்களைச் சுற்றி கரு வளையம், சோர்வு போன்ற பிரச்னை ஏற்பட்டது. அனைத்துக்கும் மேலாக மலச்சிக்கல் பிரச்னையும் ஏற்பட்டது.

இவ்வளவு பிரச்னைகள் வந்தும் கண்ட கண்ட மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொண்டேனே தவிர, பிரச்னைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறியவில்லை. தண்ணீர் அருந்தாமை என்னுடைய நினைவுக்கே வரவில்லை. என்னுடைய பாட்டி நிறைய மூலிகை டிப்ஸ் கொடுப்பார்கள். அப்போதுதான் ஏன் நம்முடைய பிரச்னை குறித்துப் பாட்டியிடம் கேட்கக் கூடாது என்று தோன்றியது. அவர் என்னிடம் முதலில் கேட்ட கேள்வி தண்ணீர் எவ்வளவு குடிக்கிறாய் என்பதுதான். தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்றார். அப்போதுதான் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. ஏலக்காய் டீ விரும்பிக் குடிக்கிறோமே, ஏன் தண்ணீரில் ஏலக்காயைப் போட்டு அருந்தக் கூடாது என்று தோன்றியது.

தண்ணீரில் ஏலக்காயைப் போட்டு, காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் குடிநீரை அருந்தினேன். ஏலக்காயில் நிறையப் பலன்கள் உள்ளது என்று படித்திருக்கிறேன். இருப்பினும், எனக்குத் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை போனால் போதும். வெறும் தண்ணீரைக் குடிப்பதற்குப் பதில் வித்தியாசமாகக் குடிக்கலாமே என்றுதான் ட்ரை செய்தேன். ஏலக்காய் சேரும்போது, அதன் வாசனை, சுவை எனக்கு வித்தியாசமாக இருந்தது. அவ்வப்போது குடிக்கத் தோன்றியது.

தொடர்ந்து 14 நாட்கள் இப்படிக் குடித்தேன். எனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை நான் உணர்ந்தேன். அவை, என்னுடைய எனர்ஜி அளவு அதிகரித்தது. தினமும் நீண்ட நேரம் வேலை பார்த்து கலைத்துப்போய்த் தூங்க செல்வேன். அடுத்த நாள் காலை எழவே தோன்றாது. ஆனால், இப்போது உற்சாகமாக வேலை செய்கிறேன். வேகமாகச் செய்கிறேன். காலையில் உற்சாகமாக எழுகிறேன்.

சரியான நேரத்துக்குச் சாப்பிடுகிறேன், போதுமான அளவு தண்ணீர் அருந்துகிறேன். நன்றாகத் தூக்கம் வருகிறது. இதனால், 14 நாளில் ஒரு கிலோ அளவுக்கு எடை குறைந்துள்ளது. நேரம்கெட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. எல்லோரையும்போல மூன்று வேளைச் சாப்பிடுகிறேன். ஒருவேளைக் காபி – டீ நேரத்தில் நொருக்குத்தீனி எடுத்துக்கொள்கிறேன்.

முன்பைக் காட்டிலும் என்னுடைய சருமம் பொலிவாக உள்ளது. நிறம் அதிகரித்துள்ளதை உணர்கிறேன். சருமத்தைத் தொட்டால் மென்மையாக இருப்பதை உணர்கிறேன். என்னுடைய தோழிகளும் இதைச் சொல்கிறார்கள்” என்றார்.ஏலக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதுதவிர, நியாசின், ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி-யும் ஓரளவுக்கு உள்ளன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது: ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தும், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைத் தடுக்கக் கூடியது. நாம் எல்லோரும் வாசனைக்காக அதைச் சேர்ப்பதாக நினைக்கிறோம். உண்மையில் அது செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலின் வளர்சிதை மாற்றப் பணிகளைத் தூண்டிவிடுகிறது. மேலும், நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கிறது.

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஏலக்காயில் நார்ச்சத்து உள்ளது. அது கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது.

தினமும் ஏலக்காய் எடுத்துக்கொள்பவர்களுக்குச் சர்க்கரை நோய்க்கான வாய்ப்புக் குறைவாம். இதில் உள்ள மக்னீசியம் என்ற தாது உப்பு சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஏலக்காய் வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. சருமத்தில் உள்ள சிறிய ரத்தக் குழாய்களில் சீரான ரத்த ஓட்டம் பாய்வதை உறுதி செய்வதால், சருமம் பொலிவாகிறது. சருமத்தின் ஆரோக்கியம் மேம்படுகிறது.