இன்றைய காலத்தில் யாரும் பல்லிகள் நமது வீட்டில் இருப்பதை விரும்புவதில்லை. இதனால் கடைகளில் விற்கப்படும் நச்சுத் தன்மைக் கொண்ட பல்லி விரட்டி மருந்துகளை பயன்படுத்துகின்றோம்.நச்சுத் தன்மை வாய்ந்த மருந்து பொருட்களை நமது வீட்டில் பயன்படுத்துவது நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு மிகவும் ஆபத்தானது.
எனவே எந்த உயிரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில், நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றது போல இயற்கையான முறையில் பல்லி மற்றும் பூச்சிகளை விரட்டுவதற்கு சூப்பரான வழிகள்.
காபித்தூள்
நமது வீட்டில் உள்ள காபித்தூளுடன், மூக்குப் பொடி சேர்த்து கலந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, கூர்மையான குச்சிகளின் முனையில் இந்த உருண்டைகளைக் குத்தி, பல்லிகள் மற்றும் பூச்சிகள் இருக்கும் இடங்களில் வைக்க வேண்டும்.