28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1040105432162988154b75b5cf461b9d80463351b2d7727cc529ff09c3dff8849c17a521e871071241969959362

டெல்லியில் அடக்கம் செய்ய ஆள் இல்லாமல் கிடந்த இந்து பெண்ணின் சடலம்..!

டெல்லியில் இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் இல்லாமல் கிடந்த வயதான இந்து பெண்மணி ஒருவரின் உடலை தகனம் செய்ய, அங்கிருந்த இஸ்லாமிய வாலிபர்கள் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த 65 வயது பெண் உடல்நல குறைவால் கடந்த திங்கள்கிழமை உயிர் இழந்துள்ளார்.

1040105432162988154b75b5cf461b9d80463351b2d7727cc529ff09c3dff8849c17a521e871071241969959362

தாயின் அருகில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமே இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருக்கும் அவர்களது உறவினர்களால் அங்கு வரமுடியவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகன்கள் திண்டாட, நாங்கள் இருக்கிறோம் என கூறி, அந்த பகுதியில் இருந்த சில இஸ்லாமிய இளைஞர்கள் சடலத்தை தகனம் செய்ய உதவியுள்ளனர்.

மேலும், தகனம் செய்யும் இடத்திற்கு உடலை எடுத்துச்செல்ல வாகனங்கள் ஏதும் கிடைக்காததால் இறந்த பெண்மணியின் உடலை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் தங்கள் தோள்களில் சுமந்து சென்று தகனம் செய்ய உதவி செய்துள்ளனர் அந்த இஸ்லாமிய இளைஞர்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் வைரலானதை அடுத்து, இந்து – முஸ்லீம் இடையே இருக்கும் சகோதரத்துவத்தை இந்த சம்பவம் எடுத்துரைப்பதாக மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறிவருகின்றனர்.