25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
serial actress gujal

கசிந்த தகவல்! கழட்டிவிட்ட நடிகை.. விவாகரத்தான பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கும் அந்த காதலர்

தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகை என்றால் அவர்தான். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும் என்பதைப்போல நடிகைக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி வருகின்றன. டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தாலும் வெகுவிரைவில் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் அந்த நடிகை.

ஆனால் டிவியில் இருக்கும்போது அந்த நடிகையின் அஜால் குஜால் வேலைகளை பற்றி தற்போது தான் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எப்போதுமே ஒருவர் பெரிய ஆளாக ஆனால் தான் அவருடைய பழைய வாழ்க்கையை தோண்ட ஆரம்பிப்பார்கள்.


அப்படி தோண்டும் போது மாட்டியது தான் இந்த அம்மணியின் பல லீலைகள். அம்மணி முதல் முதன்முதலில் டிவி செய்யும்போது சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டாராம்.

அது நாளடைவில் முற்றி போக அம்மணியும் அந்த நடிகரும் அவ்வபோது லிவிங்டுகெதர் முறையிலும் வாழ்ந்து வந்தார்களாம். வெளிநாடுகள் செல்வதில் ஆர்வம் கொண்டிருந்த நடிகை அவ்வப்போது அந்த நடிகருடனும் சென்று அஜால் குஜாலாக இருந்தாராம்.

ஆனால் காலப்போக்கில் அந்த நடிகையின் மவுசு கூட கூட அந்த நடிகருக்கு பயம் ஏற்பட்டு விட்டதாம். இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கேட்ட நடிகரை எப்படிக் கழற்றி விடலாம் என யோசித்து திறமையாக கழட்டிவிட்டாராம் நம்ம நாயகி.

அந்த நடிகரும் ஒன்னும் அம்மாஞ்சி கிடையாது. சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விவாகரத்தாகி வந்த டிவி நடிகை ஒருவரை அங்கேயே செட் செய்துவிட்டார். அந்த நடிகரின் மன்மத லீலையை கண்டு பிடித்த நடிகை அதையே காரணம் காட்டி பிரிந்து விட்டாராம்.

சமீபத்தில் தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்திய அந்த பிரபல நடிகை அவருடன் பல வருடமாக காதலித்து வருவதாக கூறியதெல்லாம் பொய்யாம். தான் எது சொன்னாலும் தலையாட்டி கொண்டு கூட சுற்றி வருவதால் அந்த நபரை வைத்துள்ளாராம்.

அம்மணிக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக் கொண்டே செல்வதால் இவரையும் கழட்டிவிட வாய்ப்பு இருப்பதாக நடிகையின் சுயரூபம் அறிந்தவர்கள் அரசல் புரசலாக பேசி வருகிறார்களாம். இருந்தாலும் அம்மணி தன்னுடைய பாவமான மூஞ்சியை வைத்து சிம்பதி கிரியேட் பண்ண அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை என அசால்ட்டாக இருக்கிறாராம்.

இப்போது இருப்பவர் கூட அம்மணியின் மூன்றாவது காதலர் தானாம். கடைசியாக வந்த இந்த இரண்டு காதலர்களும் முதல் காதலர் யார் என்பதை அறிந்து கொள்வதில் மும்முரமாக இருக்கிறார்களாம்.