25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
625.500.560.350.160.300.053.800.9 5

லிப்ஸ்டிக் போடாமல் இயற்கையாக உங்கள் உதடு சிவப்பாக இருக்கணுமா? இதை முயன்று பாருங்கள்….

பீட்ரூட்

பீட்ரூட் உங்கள் உதடுகளுக்கு நிறத்தை மட்டும் வழங்காது இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளைப் பாதுகாக்கவும், ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது. பீஸ் வாக்ஸ் விட்டமின் ஏ கொண்டுள்ளதால் உங்கள் உதடுகளை வறண்டு விடாமல் பாதுகாக்கவும் ஆலிவ் ஆயில் உதடுகளை மென்மையாக வைக்க உதவும்.1/2 தேக்கரண்டியளவு பீ-வேக்ஸ், ஒரு தேக்கரண்டியளவு பீட்ரூட் கூழ், ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் எடுத்து கிண்ணத்தில் போட்டு இரட்டை பாய்லர் முறையைப் பயன்படுத்தி பீ-வேக்ஸை உருக வைத்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்துச் சூடுபடுத்துங்கள். பின்பு அதனை அடுப்பிலிருந்து எடுத்து பீட்ரூட் கூழ் சேர்த்து கலந்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெய்
பீ-வேக்ஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக், லாவெண்டர் எண்ணெய் இவை அனைத்தும் சேர்ந்த கலவை உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடன் வைப்பதற்கு உதவும். தேங்காய் எண்ணெய் உங்கள் உதடுகளை வெடித்து விடாமலும் வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது. லாவெண்டர் எண்ணையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உதடுகளை ஈரப்பதத்துடன் வைக்கிறது. மேலும் இவை உதடுகளில் கொலாஜன் உற்பத்தியையும் மேம்படுத்துவதால் சோர்வான உங்கள் உதடுகளைச் சரி செய்கிறது. ரெட் லிப்ஸ்டிக் உங்கள் உதட்டினை பிங்க் வண்ணத்தில் மாற்றும்.இரண்டு தேக்கரண்டியளவு பீஸ் வாக்ஸ், ஒரு தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய், சிறிதளவு ரெட் லிப்ஸ்டிக், ஒரு தேக்கரண்டியளவு பாதாம் எண்ணெய், 10 சொட்டு லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது பீ-வேக்ஸை கிண்ணத்தில் போட்டு தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ரெட் லிப்ஸ்டிக் ஆகியவற்றை அடுப்பில் வைத்து இரட்டை பாய்லர் முறையைப் பயன்படுத்தி வெப்பப்படுத்துங்கள். அனைத்தும் உருகியவுடன் எடுத்து அதில் லாவெண்டர் எண்ணெய் கலக்கிச் சேகரித்து வைத்துத் தேவைப்படும் போது பயன்படுத்துங்கள்.625.500.560.350.160.300.053.800.9 5

ஆலிவ் எண்ணெய்
பீட்ரூட், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் ஆகிய மூன்றினையும் சேர்த்துப் பயன்படுத்தும் போது உங்கள் உதட்டிற்கு ஈரப்பதத்தினை தருகிறது. ஆலிவ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு மற்றும் காயங்களைக் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்களின் வறண்ட உதடுகளை மென்மையாக்க உதவும். தேன் என்பது இயற்கை உமிழ்நீராகச் செயல் படுவதால் உங்கள் உதடுகளை ஈரப்பதத்துடனும் பளபளப்பாகவும் வைக்கிறது. ஒரு பீட்ரூட், நான்கு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய், இரண்டு தேக்கரண்டியளவு தேன் எடுத்து பீட்ரூட்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதனை எடுத்து வடிகட்டி பிரிட்ஜில் வைத்து வேண்டும் போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிளாக் பெர்ரி
பிளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றும் சேர்த்து நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் உதடுகளுக்கு ஒரு அழகான நிறத்தைத் தரும். பிளாக் பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவை இரண்டும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஒன்றாகும். இவை உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்கவும், மென்மையாக்கவும் உதவுகின்றன. 4 முதல் 5 பிளாக் பெர்ரி, 4 முதல் 5 ராஸ்பெர்ரி, ஒரு தேக்கரண்டியளவு ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து பிளாக் பெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி இரண்டையும் ஒன்றாகக் கலந்து கூழ் ஆக்கி அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்துச் சூடுபடுத்துங்கள். இப்போது அதனை எடுத்து வடிகட்டி பிரிட்ஜில் வைத்து ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாதுளை
மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு ஆகியவை அடங்கியுள்ளன. எனவே இவை உங்கள் வறண்ட மற்றும் சோர்வான உதட்டினை சரி செய்ய உதவும். அத்துடன் உங்கள் உதடுகளுக்குச் சிவப்பு நிறத்தினை கொடுக்கும். சிறிதளவு மாதுளை, 1/2 தேக்கரண்டியளவு தேங்காய் எண்ணெய் எடுத்து மாதுளையை நன்றாக அரைத்து வடிகட்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். பின்னர் இந்த கலவையை பிரிட்ஜில் வைத்து வேண்டிய போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.