29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
manorama

மனோரமா மகனுக்கு என்னாச்சு ? மதுபானம் இல்லை !!

மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவரும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கொரோனா காரணமாக தற்போது ஊரடங்கு நீடிப்பதால் இவருக்கு மது கிடைக்காததால் அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்தவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இதுபற்றி மனோரமாவின் பேரனும், பூபதியின் மகனுமான டாக்டர் ராஜராஜனிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது ; அப்பா மது அருந்துவது உண்மை தான், 144 தடை உத்தரவால் மதுபானம் கிடைக்கவில்லை. இதனால் ஓரிரு தூக்க மாத்திரை சாப்பிட்டு அமைதியாக ஓய்வெடுத்து வந்தார்.

இப்போது இந்த மாத்திரைக்கும் தட்டுப்பாடு.

p?c1=2&c2=21733245&c4=http%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Ftamil%2Fnewstm epaper newstm%2Fmathubanam%2Billai%2Bmanorama%2Bmakanukku%2Bennachu newsid 176833182%3Fsr%3Ddailyhunt test&c9=m.dailyhunt532483 0

இதனால் குடியை திடீரென நிறுத்தும் சூழல். பொதுவாக இதுப்போன்று குடியை திடீரென நிறுத்தும் போது குடிப்பவர்களுக்கே வரும் நடுக்கம் இவருக்கும் வந்தது. அப்பாவுக்கு அது தீவிரமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம்.

இது தான் உண்மை. தூக்க மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. அவர் ஏதோ தற்கொலை செய்ய முயன்றது போன்று செய்தி பரப்புகிறார்கள். தயவு செய்து இது போன்று வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். தற்போது அப்பா நலமாக உள்ளார் என்றார்

Newstm.in