25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1527833080

சூப்பர் டிப்ஸ்! தொண்டையில் சேரும் சளியை விரட்டியடிக்கும் சித்தரத்தை

அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்?’ என்ற பழமொழி உண்டு. அந்த அளவுக்கு தொண்டையில் சேரும் கபத்தை (சளி) வெளியேற்றும் சக்தி சித்தரத்தைக்கு அதிகளவில் உள்ளது.

சித்தரத்தை தாவரம், இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது. கிழக்காசிய நாடுகளில் இதனை ‘சீன இஞ்சி’ என்று அழைக்கின்றனர். இது காரச் சுவை கொண்டது.

சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் சித்தரத்தையை வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு பயன்படுத்துள்ளனர்.

இந்த தாவரம் குறுஞ்செடியாக வளரும். இலைகள் நீண்டு காணப்படும். இதன் கிழங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்ந்த பின்பு அடர்ந்த சிவப்பு நிறமாக மாறும். இதில் அதிகளவில் மருத்துவகுணத்துடன் நறுமணத்தை கொண்டது. நறுமணம் கொண்டதால் பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சித்தரத்தை சேர்க்கப்படுகிறது.

 

சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகின்றன. இதன் வேர் மருத்துவ குணம் கொண்டது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.1527833080

சித்தரத்தையின் பயன்கள்:

 

  • தொண்டையில் சேரும் கபத்தை அகற்றும்.
  • உடல் வெப்பத்தை தணிக்கும். பசியை தூண்டும்.
  • நெஞ்சிலுள்ள சளியை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.
  • நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.
  • எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்து.
  • கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுத்தால் இருமலின் தாக்கமும் இழுப்பும் குறையும்.
  • சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும்.