27.3 C
Chennai
Wednesday, Jan 15, 2025
soundarya jagapathi

நடிகை சௌந்தர்யா உடன் தொடர்பில் இருந்தது உண்மை தான்! விசுவாசம் வில்லன் ஓபன் டாக்.!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா. பாஜக கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இணைந்த இவர் விமான விபத்தொன்றில் காலமானார்.

இவர் தெலுங்குவில் நடிகர் ஜெகபதி பாபு கூட இணைந்து நடித்த போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகுவதாகவும் இருவரும் தொடர்பில் இருந்து வருவதாகும் பரபரப்பாக பேசப்பட்டது.

soundarya jagapathi

இவ்வளவு நாள் கழித்து தற்போது இது குறித்து பேசியுள்ளார் நடிகர் ஜெகபதி பாபு. எனக்கும் சௌந்தர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்கள் உண்மையே. ஆனால் அது நீங்கள் நினைக்கும் தொடர்பு அல்ல. நல்ல தொடர்பு, நட்பு ரீதியான தொடர்பு எனக் கூறியுள்ளார்.

மேலும் நானும் சௌந்தர்யாவின் அண்ணனும் நல்ல நண்பர்கள். இருவரும் அடிக்கடி வீடுகளில் சந்தித்து பேசிக் கொள்வோம். அப்படித் தான் சௌந்தர்யாவும் என கூறியுள்ளார்.