25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024
re entry actress

இதை நீங்களே பாருங்க.! பட வாய்ப்புக்காக டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற நாயகியாக விளங்கியவர் தான் அந்த பிரபல நடிகை. கவர்ச்சி காட்ட வேண்டும் என்றாலும் சரி, குடும்பப்பாங்கான கதாபாத்திரம் என்றாலும் சரி, நடிகையை அடிச்சுக்க ஆளே இல்லை.

திருமணத்திற்கு பிறகு வழக்கம்போல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை, சமீப காலமாக சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் முன்னணி நடிகைகள் ஸ்டார் நடிகருக்கு ஜோடி போட்டதைப் பார்த்து தற்போது இந்த நடிகைக்கும் அந்த ஆசை வந்துள்ளதாம்.

ஸ்டார் நடிகருடன் ஜோடி போட்டாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது தன்னுடைய பார்வையை டாப் நடிகர் பக்கம் திருப்பி உள்ளாராம். சமீபத்தில் நடிகர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆடுவதற்கு நட்பெல்லாம் காரணம் இல்லையாம்.

எப்படியாவது அந்த நடிகரின் படத்தில் ஒரு வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதே என்கிறது சினிமா வட்டாரம். இருந்தாலும் நடிகரின் சமீபத்திய மார்க்கெட் ரேஞ்சே வேற லெவலில் சென்று கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் நடிகை பார்ப்பதற்கு ஆண்டி போல இருந்தாலும் பரவாயில்லை வயதானவர் போல் ஆகி விட்டதால் தயாரிப்பாளர்களுக்கு நடிகையின் மீது பெரிய ஈடுபாடு இல்லையாம். இருந்தாலும் எப்படியாவது மீண்டும் பேமஸ் ஆகி விட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு வலம் வருகிறாராம்.

டிக் டாக்கில் நடிப்பவர்கள் எல்லாம் ஒரு ஆளு என நம்பி அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி தன்னுடைய மரியாதையை தானே கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். இதையெல்லாம் எடுத்துச் சொல்ல ஆள் இல்லாமல் தான் நடிகை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளார்.

வயதாகிவிட்டதால் முன்னாடி மாதிரி கவர்ச்சி காட்டியும் எந்த பட வாய்ப்பும் பெற முடியாது என்பதை தெரிந்து கொண்ட நடிகை தன்னுடைய சொந்த ஊர் பக்கம் போட்டி படுக்கையை கட்ட முடிவெடுத்து விட்டாராம்.