25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
coronavirus 2

பொலிவூட் தயாரிப்பாளரின் மகள்களுக்கு கொவிட்-19 தொற்று

சென்னை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் இரண்டு மகள்களுக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கரீம் மொரானியின் இளைய மகள் ஷாஸா மொரானிக்கு கொவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மார்ச் முதல் வாரம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு அறிகுறிகள் இல்லை. திங்களன்று அவர் மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்னொரு பக்கம் ஷாஸாவின் மூத்த சகோதரியும் நடிகையுமான ஸோவா மொரானி, மார்ச் இரண்டாம் வாரத்தின்போது ராஜஸ்தான் சென்று திரும்பியுள்ளார். அவருக்கும் இப்போது தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை ஸோவாவும் உறுதி செய்துள்ளார்.coronavirus 2

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என்றும், இப்போதைக்கு அவரது குடும்பம், வீட்டுப் பணியாட்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதைப் பற்றிப் பேசியுள்ள கரீம் மொரானி, “ஷாஸாவுக்கு அறிகுறிகள் இல்லை. ஆனால் அவருக்குத் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

ஸோவாவுக்கு அறிகுறிகள் இருந்தது. அப்போது பரிசோதனை செய்யும்போது அவருக்குத் தொற்று இல்லை. இருவருமே இப்போது தனிமையில், சிகிச்சையில் உள்ளனர்” என்று கூறினார்.

இதேவேளை, இந்தியாவில் கொவிட்-19 தொற்றினால் 4,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 114 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.