தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்கள் என்று பார்த்தால் இப்போதைக்கு தல மற்றும் தளபதி மட்டும் தான். 50 முதல் 80 கோடி வரை சம்பளம் வாங்கும் இதுபோன்ற ஹீரோக்கள் தற்போதுவரை கொரோனாவின் நிவாரண நிதிக்கு சல்லி பைசா கூட கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் FEFSI தலைவர் R.K.செல்வமணி நேரடியாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு பெப்சி ஊழியர்களுக்கு உதவுங்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு சுரேஷ் சந்திரா தற்போது சூழ்நிலை சரியில்லை என்றும் அஜித்தின் தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் கூடவே இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி உள்ளார்.
அஜித்தின் தந்தை கொரோனா பிரச்சனை காரணமாக மருத்துவமனை கூட செல்ல முடியாத நிலையில் இருக்கிறாராம். இதனால் அஜித் பெரும் கவலையில் உள்ளாராம். அதனால் அவருடைய குடும்ப மருத்துவர் மட்டும் அஜித் வீட்டிற்கு வந்து பார்த்து செல்கிறார் என்று கூறுகின்றனர்.
மக்களின் டிக்கெட் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் முன்னணி நடிகரான அஜித் இதுவரை எதுவுமே செய்யவில்லை என்ற தவறான கருத்து இன்றுடன் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தெரிகிறது.
தற்போது தல அஜித் பிரதமர் நிதியாக 50 லட்சமும், தமிழ்நாடு முதலமைச்சர் நிதியாக 50 லட்சமும் மற்றும் பெப்சி ஊழியர்களுக்கான தொகையாக 25 லட்சமும் மொத்தமாக ரூ. 1.25 கோடி பணம் கொடுத்துள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுரேஷ் சந்திரா கூறிய ஆறுதலால் தவறாக பேசிய பலரின் மூக்கு தற்போது உடைப்பட்டுள்ளது என்று ரசிகர்களும் கொண்டாடுகின்றனர். ஏற்கனவே FEFSI க்கு அஜித் நிறைய முறை உதவிகள் செய்துள்ளார் என்பது கூடுதல் விஷயம்.
ஆனால் தற்போது அஜித் இருக்கும் சூழ்நிலையில் அவருடைய தந்தை விரைவில் மீண்டு வர வேண்டும் என்று மக்களும் வேண்டுகின்றனர். ஏன் என்றால் அந்த மகிழ்ச்சியில் கூடுதலாக மக்களுக்கு நிறைய உதவிகள் செய்வாராம்.