29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Henna for Skin

இளநரையை தடுக்க மைலாஞ்சியை எப்படி பயன்படுத்தலாம்?

மைலாஞ்சி  என்றால் புதிதாக   இருக்கே என்று நீங்கள்  யோசிக்கலாம். ஆனால் பெண்கள்  அழகிற்காக பயன்படுத்தப்படும் இயற்கை  அழகு சாதனப் பொருட்களில் மைலாஞ்சியும்  ஒன்று. இது வேற ஒண்ணுமில்லைங்க, நம்ம மருதாணியை   தான் மைலாஞ்சி என்றும் அழைப்பார்கள். தலைமுடியை கருமை   நிறமாக மாற்றுவதற்கு மருதாணி பெருமளவில் உதவி புரிகிறது. இயற்கை   முறையில் மருதாணியை வைத்து ஹேர்-டை செய்து போட்டால் முடி நன்கு   கருமையாக வளர தொடங்கும். சரி இளநரையை தடுக்க இயற்கையான முறையில் ஹேர்-டை   செய்வது எப்படி என்பதை இதில் காண்போம்.

மருதாணி  முடிக்கு கருஞ்சிவப்பு   நிறத்தையும், அவுரி இலை கூந்தலுக்கு  கருநீல நிறத்தையும் தரும். இவை இரண்டும்  சேர்ந்து கிடைக்கும் கருமை நிறம், நீண்ட   நாட்களுக்கு முடியில் தங்கியிருக்கும்.

அவுரி பொடி:

அவுரி   பொடி கூந்தலுக்கு   நீல நிறத்தை தருவதால், இளநரை  பிரச்சனைக்கு தற்போது இதை முக்கியமாக  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மருதாணி  பொடி:

முற்காலம் முதலே  மருதாணி பொடியை இளநரையை  தடுக்க பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால்   இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும்  போது கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.

இதை  எப்படி   கூந்தலுக்கு  பயன்படுத்துவது?

முதலில்   கூந்தலை நன்கு   எண்ணெய் போக அலசிக்  கொள்ள வேண்டும். எண்ணெய்   இல்லாமல் இருந்தால் தான் இந்த   பொடியை தலைக்கு அப்ளை செய்வதில்   நல்ல பலன் கிடைக்கும்.

கூந்தலை   நன்கு காய   வைத்துக் கொள்ளுங்கள்.  பின்பு தேவையான அளவு   மருதாணி பொடியை எடுத்து   தண்ணீரில் சேர்த்து கரைத்துக்   கொள்ள வேண்டும். மருதாணி பொடி நாட்டு   மருந்து கடைகளில் கிடைக்கும். இல்லையெனில்   நீங்கள் மருதாணி இலைகளை தனியாக உறுவி காய   வைத்து, நைசாக அரைத்து ஒரு பாட்டிலில் போட்டு  வைத்து உபயோகிக்கலாம். வீட்டில் தயாரிக்கும் மருதாணி   பவுடரை நீங்கள் மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

Henna for Skin
Henna for Skin

இப்போது   மருதாணி கலவையை உங்கள்   கூந்தல் முழுவதுமாக அப்ளை   செய்ய வேண்டும். ஒவ்வொரு கொத்து   முடியாக எடுத்து இளநரை இருக்கும்   அனைத்து இடங்களிலும் இதை தடவ வேண்டும். ஒரு  மணி நேரம் வரை கூந்தலை ஊற வைத்து, பின்பு   முடியை அலசிக் கொள்ளலாம்.

அடுத்தநாள்   அவுரி பவுடரை  தண்ணீரில் கரைத்து  கூந்தல் முழுவதும் அப்ளை  செய்ய வேண்டும். அவுரி பவுடரும்   நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதையும்   கூந்தலின் அனைத்து இடங்களிலும் தடவ வேண்டும். பின்பு   முடியை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு கூந்தலை அலசிக்   கொள்ளலாம். இப்போது உங்களுக்கு கூந்தலின் நிறம் மாறியிருக்கும்.  மருதாணி கூந்தலுக்கு அடர் சிவப்பு நிறத்தையும், அவுரி அடர் நீல   நிறத்தையும் தருவதால், இந்த இரண்டு கலவையும் சேர்ந்து கூந்தலுக்கு   அடர் கருமை நிறத்தை தரும்.

இதை  வாரத்திற்கு   ஒருமுறை என தொடர்ந்து   ஒரு மாதம் பயன்படுத்தி வந்தால்  கூந்தல் நிரந்தரமாக கருமை நிறத்தில்   மாறிவிடும். இதை நீங்களும் வீட்டில் ட்ரை   செய்து பாருங்கள் தோழிகளே, உங்களுக்கு மருதாணி   மற்றும் அவுரி சேர்ந்த கலவை நல்ல பலனை தருவதாக  அமையும்.