25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
breakup ac

அடேங்கப்பா! சினிமா கிசுகிசுமீண்டும் சினிமா ஆசையில் நுழைந்த நடிகை..

தமிழில் ஆரம்பமான முதல் படத்திலேயே சைக்கோ கதாபாத்திரத்துடன் வலம் வந்தார் அந்த பிரபல நடிகை. தொடர்ந்து அதே நடிகருடன் அடுத்த படத்தை பண்ணும்போது இருவருக்குள் காதல் என கிசுகிசு வெளிப்பட்டது.

இதனால் உஷாரான ஹீரோயின் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். அழகும் கவர்ச்சியும் நிரம்பி வழிந்த அந்த நடிகைக்கு திடீர் என பல வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

நடிகை பல தயாரிப்பாளர்களிடம் அட்ஜஸ்ட் செய்யாமல் இருந்ததால் யாரும் அவரை சினிமாவில் நடிக்கவைக்க ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் உயரமான நடிகர் படத்திலும் டாப் நடிகர் படத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்தார்.

கடைசிவரை படுத்தால்தான் பட வாய்ப்பு என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால் மனம் நொந்து காணப்பட்டார். ஆனால் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தில் நடிகையின் கேரக்டர் பெரிதும் பேசப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 2 பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

அதை கெடுக்கும் விதத்தில் நடிகையின் பழைய காதலை கிளறி விட்டு விட்டார்களாம் அந்த வீணாப்போனவர்கள். இந்த நடிகையும் அந்த கழுகு நடிகரும் ஒரு படத்தில் நடிக்கும்போது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

திடீரென பற்றிக்கொண்ட அந்தக் காதல் தீ, பட சூட்டிங் நிறைவடையும்போதே ஊத்தி மூடிக்கொண்டதாம். ஆனால் தற்போது அந்தக் கதையை ஏன் கிளப்பி வருகிறார்கள் என நடிகை மனம் நொந்து வருகிறாராம்.

அந்த ஹீரோவும் இதுதான் சாக்கு என மீண்டும் ஒட்டி உரச நடிகைக்கு தூதுவிட்டுள்ளாராம். ஆனால் அந்த நடிகையோ, உன்னால ஒரு தடவை பட்டதே போதும் என ஒதுங்கிவிட்டாராம். அப்படி என்ன பண்ணி இருப்பாரு? என கோலிவுட் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசிக் கொள்கிறார்கள்.