23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
625.0.560.350.160.300.053.8

ஹெல்த் ஸ்பெஷல்! உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கா? உடனே மருத்துவரை அணுகவும்

குடல் புற்றுநோயானது இரண்டாவது மிகப்பெரிய ஆட்கொல்லிப் புற்றுநோய் என்று அழைக்கப்படுகின்றது.

இது பெருங்குடல், சிறுகுடலில் ஏற்படும் புற்றுநோயைக் குறிக்கும்.

பெருங்குடலில் சாதாரண புண்ணில் தொடங்கி, காலப்போக்கில் அது புற்றுக்கட்டிகளாக உருவெடுத்துப் பாடாய்ப்படுத்தும்.

இந்த புற்றுநோய் 50-க்கு மேலானவர்கள்,புகைப்பழக்கம் உள்ளவர்கள் ,மரபு வழியாக குடும்பத்தில் வேறு யாருக்கேனும் இந்தப் புற்றுநோய் இருந்தால் ,உடல் பருமனாக உள்ளவர்கள் , அசைவ உணவுப் பிரியர்கள், குறைவான அளவு நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பவர்கள் போன்றவர்களுக்கு ஏற்பட கூடும்.

அந்தவகையில் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன என்பதைப் தெரிந்து கொண்டாலே போதும். இதிலிருந்து எளியதாக வெளிவர முடியும். தற்போது இதன் அறிகுறிகளை பார்ப்போம்.

  • ரத்தம் கலந்து மலம் வெளியேறினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  • மலம் வெளியேற்றும் பகுதியில் தொடர்ச்சியான அரிப்பு இருந்தால் மலக்குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.
  • ஆசன வாய் பகுதியில் கட்டி இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  • ஆசன வாயில் கடுமையான வலி அல்லது மலம் வெளியேற்றும் பகுதியானது பாரமாக இருக்குமாயின், அதுவும் மலக்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
  • குடலியக்கம் அல்லது மலம் வெளியேற்றுவதில் அசாதாரண மாற்றங்களை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை உடனே அணுகுங்கள். ஏனெனில் இதுவும் ஓர் அறிகுறி.
  • மலப்புழை வழியே அசாதாரணமாக ஏதேனும் வெளியேற்றத்தைக் கண்டால், அதுவும் மலக்குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.
  • மலப்புழை அல்லது ஆசன வாயில் உள்ள நிணநீர் முனைகள் வீக்கத்துடன் இருந்தால், அது மலக்குடல் புற்றுநோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.