25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
625.500.560.350.160.300.053 1

ஹெல்த் ஸ்பெஷல்! மாதவிடாய் நின்று போதல்: பெண்களே இந்த அறிகுறிகள் இருக்கா?

ஒரு பெண்ணின் வாழ்க்கையில், மாதவிடாய் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதபோல் தான் மாதவிடாய் நின்றுபோகும் தருணமும்.

பெரும்பாலும் மாதவிடாயானது நாற்பத்தைந்து முதல் ஐம்பது வயது உள்ள பெண்களுக்கு தான் நிற்கும் என்றாலும், இன்று சில பெண்களுக்கு முப்பது வயதிலேயே கூட நின்று போகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோகும் சமயங்களில் பெண்களின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதை மொனோபாஸ் என்று கூறுவர். அத்தகைய சமயங்களில் உடலினை சரியான முறையில் கண்காணிக்க வேண்டும்.

 

மாதவிடாய் நின்றுபோவதற்கான முக்கிய அறிகுறிகள்

>

தூக்கமின்மை

மாதவிடாய் நின்றுபோவதற்கு முதல் அறிகுறி இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை, இரவில் நன்கு தூங்கி கொண்டிருக்கும் பொழுது திடீரென நடு இரவில் எழுந்துவிட்டு பின்பு உறக்கம் வராமல் அவதிப்பட்டு மறு நாள் முழுவதும் உடல் தளர்வுற்று இருப்பது ஆகும்.

இதை தவிர்க்க அதிக அளவு நீர் அருந்துவதும் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மது வகைகளை விலக்கி வைப்பதும் நன்கு தூங்குவதற்கு உதவும்.

முறையற்ற சுழற்சி

மாதவிடாய்க்காலங்களின் ஏற்படும் முறையற்ற சுழற்ச்சியும் மாதவிடாய் நின்றுபோவதற்கு ஒரு அறிகுறி ஆகும். இதற்கு காரணம் மாதவிடாய்க்காலங்களில் அளவுக்கதிகமான அல்லது மிகக் குறைந்த இரத்தபோக்கு ஏற்படுவதனால் சுழற்சிமுறையில் மாற்றம் உண்டாகி முறையற்ற வகையில் மாதவிடாய் ஏற்படும்.625.500.560.350.160.300.053 1

மனதில் மாற்றங்கள்

மனதில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் ஆகியவையும் மாதவிடாய் நின்றுபோவதற்கான அறிகுறிகள். மேலும் பெண்களின் உடலில் மாதவிடாய் தோன்றுமுன் ஏற்படும் ஊக்கமின்மையானது மாதவிடாய் நின்றுபோகும் சமயம் அதிகமாக ஏற்படுவதற்கு முக்கிய காரணம் பெண்மைசுரப்பிகள் அளவு குறைவதே ஆகும்.

சிறுநீர் கழிக்கும் போது வலி

பெண்மைச் சுரப்பிகளின் அளவு குறையும் போது, மாதவிடாய் தடைபட்டு உடலில் உற்பத்தியாகும் அணுக்கள் மீண்டும் உற்பத்தியாகும். இத்தகைய சமையங்களில் ஏற்படும் தளர்ச்சியினால், சிறு நீர் கழிக்கும் போது வலி ஏற்படும் மற்றும் இருமும்போது ஒரு துளி சிறு நீர் கழித்தல், கழிவறைக்குள் செல்வதற்கு முன்பாகவே சிறு நீர் வெளியேறுதல் போன்ற தொந்தரவுகள் வரக்கூடும்.

தலை, கழுத்து பகுதிகளில் பாரம்

திடீரென உடல் முழுவதும் சூடாகி தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் மிகவும் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவது மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறியாகும். மேலும் உடலில் அதிகப்படியான வியர்வையினால் சூடு உடலெங்கும் பரவுவது போன்ற உணர்வு ஏற்பட்டு கழுத்து மற்றும் மார்புப் பகுதிகள் பாரமாக இருப்பது போல் தோன்றும்.

முடி உதிர்தல்

வயதாவதால் கருப்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோல்கள் தளர்வடைந்து காணப்படும். மேலும் பெண்மைச்சுரப்பிகளின் அளவு குறைவதால் அதிகமாக முடி உதிரும். மேலும் தலைமுடியை பாதுகாப்பதற்காக வேதிபொருட்கள் அதிகமுள்ள கலவை பூச்சுக்களை உபயோகிப்பதை தவிர்க்கவும்.

பாலுணர்ச்சி குறைதல்

பாலுணர்ச்சி சம்பந்தமாக எந்த உணர்வும் எழாமல் இருப்பது அல்லது எரிச்சலடைவது போன்றவைகளும் மாதவிடாய் நின்றுபோவதற்கான அறிகுறிகள். இது போன்ற தொந்தரவு அதிகமானால்,மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.