34.7 C
Chennai
Saturday, Jun 22, 2024
625.0.560.350.160.300.053.80 1

வாக்கிங் சென்ற நடிகை!… கடித்து குதறிய தெரு நாய்கள்

கொரோனா வைரசால் நாடே முடங்கியுள்ள நிலையில் வெளியே நடைப்பயிற்சி செய்த நடிகையை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

வீட்டில் இருந்தபடியே மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் விதத்தில் புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெருவில் நடைப்பயிற்சி சென்ற இந்தி நடிகையை தெருநாய்கள் கடித்த சம்பவம் நடந்துள்ளது.

அவர் பெயர் ஆஞ்சல் குரானா, இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

625.0.560.350.160.300.053.80 1

டெல்லியில் வசித்து வரும் ஆஞ்சல், தனது குட்டி நாயுடன் நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார், அப்போது அங்கிருந்த தெருநாய்கள் ஆஞ்சலை பார்த்து குரைத்ததுடன் பாய்ந்து கடித்துள்ளன.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.

இதில் அவரது இடது பக்க இடுப்பு மற்றும் வலது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது.