27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
625.0.560.350.160.300.053.800 1

சூப்பர் டிப்ஸ்! வயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்..

பெரும்பாலான குழந்தைகளுக்கு குடல் புழு, வயிற்று பூச்சி, கிருமிகள் இதெல்லாம் இருக்கும்.

சாக்லேட், பிஸ்கெட், ஒத்துகொள்ளாத உணவுகள், மண்ணில் விளையாடுவது, கையை சப்புவது போன்றவற்றால் பரவும்.

இதற்காக கண்ட கண்ட மருந்துகளை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.

பூச்சிகளை ஓழிக்க பிரண்டை இலை பெரிதும் உதவி புரிகின்றது. இதில் துவையல் செய்து குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.

ஏனெனில் இதனால் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் ஒழியும்.

தற்போது பிரண்டையை வைத்து எப்படி துவையல் செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
  • இளம் தளிரான பிரண்டைத் துண்டுகள் – ஒரு கைப்பிடி அளவு
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
  • உளுத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
  • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.
செய்முறை

பிரண்டையின் ஓரங்களில் உள்ள நாரை எடுத்து, விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்து விடவும்.

அடுத்து அதில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு தனியாக வறுக்கவும்.

வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து அரைக்கவும்.

அனைத்தும் அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்.625.0.560.350.160.300.053.800 1