25.5 C
Chennai
Monday, Dec 23, 2024
nine 3

தெரிந்துகொள்வோமா? 9 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்!

ஒன்பதாம் எண்

nine-1
9,18,27 ஆகிய எண்களின் கீழ் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்காரர்கள் ஆவர். இவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் எதற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள். இவர்களுக்கு சட்டென்று கோபம் தலை தூக்கும். வீண் சண்டைக்கு போக மாட்டார்கள். ஆனால் சண்டைக்கு எப்போதும் தயாராக இருப்பார்கள். மற்றவர்களுடன் சண்டை இடுவது இவர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கும்.

பல அபூர்வ திறமைகளை உள்ளவர்கள் இவர்கள். சகிப்புத் தன்மை அற்றவர்கள். இவர்கள் தோல்வி வந்தாலும், வெற்றி வந்தாலும் பெரிதாக அதை பற்றி அலட்டிக் கொள்ள மாட்டார்கள். துணிச்சல் அதிகம் கொண்டவர்கள். மற்றவர்கள் இவர்களுக்கு நல்லது செய்தாலும், கேட்டது செய்தாலும் எளிதில் மறக்க மாட்டார்கள். சமயம் பார்த்துப் பழிவாங்கக் காத்திருப்பார்கள். அதனால் இவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் என்று கூறுவார்கள்.

இவர்கள் கையில் யாருடைய பணமாவது இருந்து கொண்டே இருக்கும். மற்ற எண்களில் பிறந்தவர்கள் இயற்கையைக் கண்டால் ரசிப்பார்கள். ஆனால், இவர்கள் இயற்கை எரிந்து சாம்பல் ஆகிக் கொண்டு இருந்தால் தான் இயற்கை அழகாக உள்ளது என்று கூறுவார்கள். இவர்களுக்கு நெருப்பு தான் அழகாகத் தெரியும். ஆகவே தான்,இந்த எண்ணில் பிறந்த பலர் சிறந்த தளபதிகளாகவும், போர் வீரர்களாகவும் திகழ்கிறார்கள்.

எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அது முடிக்கும் வரை ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள். அனாவசியமாக எதையும் செய்ய மாட்டார்கள். எதிலும் லாப நஷ்டம் பார்த்துதான் காரியத்தில் இறங்குவார்கள். பணத்தை சேர்த்துக் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டார்கள் மற்றும் செய்ய மாட்டார்கள்.nine 3

nine-3
இவர்கள் எந்த விஷயத்தையும் சாமர்த்தியமாக சமாளிக்கக் கூடியவர்கள். இவர்கள் நெருப்பு சம்மந்தமான வியாபாரங்களில் ஈடுபட்டால் நன்மை அடைவார்கள். இவர்கள் நல்ல உடல் பலத்துடன், மனோபலத்தையும் கொண்டவர்கள். திடீரென்று உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். பிறரை அடக்கி ஆள நினைப்பார்கள். சுதந்திர மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள். தன் காரியத்தில் மட்டுமே கண்ணாக இருப்பார்கள்.

இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆயுதங்களால் காயங்கள் வரக் கூடும். வெட்டுக் காயங்கள், தீக் காயங்கள், ஆயுதங்களால் காயங்கள் என நிறைய காயங்கள் இருக்கும். மேலும், உஷ்ண சம்மந்தபட்ட வியாதிகளின் தொல்லை இருக்கும். மேலும் சளி, மூல நோய், நரம்புத் தளர்ச்சி, அலர்ஜி, தலைவலி, மயக்கம், வயிற்று வலி போன்ற பல நோய்கள் இவர்களுக்கு வரும்.