27.3 C
Chennai
Friday, Dec 27, 2024
latest sim

அடேங்கப்பா! சிறுவயது புகைப்படத்தினை வெளியிட்ட நடிகை சிம்ரன் !! அந்த வயசிலேயே இப்படியா ??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பிரபலமான இவர் பேட்ட திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

90களில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்தின் பின்னரும் நடிப்பதை நிறுத்த வில்லை. மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் குடும்ப புகைப்படத்தினை வெளியிட்டதால் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். நடிகை சிம்ரன் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த சிம்ரன் தற்போது டிக்டாக்கில் கால் பதித்துள்ளார்.

மேலும் கைவசம் அதிகமான படங்கள் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படுகிறார்.நடிகை சிம்ரன் அவரின் இன்ஸ்டாகிராமில் சிறுவயது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திணறிப்போயுள்ளனர். சிறுவயதிலேயே இவ்வளவு அழகா என்று லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவயதில் அவர் எடுத்த செல்பி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.