நடிகை திரிஷா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் பேட்ட படத்தில் மனைவியாக நடித்திருந்தார். அவருக்கு அடுத்ததாக பரம்பதம் விளையாட்டு என்ற படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது.
மேலும் கர்ஜனை, ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன் ஆகியபடங்களில் ரெடியாக இருக்கின்றன. அண்மையில் கொரோனாவுக்காக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சமூக வலைதளங்களில் அவரை அதிகமான ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர். அத்துடன் அவர் டிக் டாக்கிலும் இணைந்துள்ளார். கொரோனாவுக்காக திரிஷா தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வரும் #SavageChallenge எனும் கலக்கலான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் ஆடும் லூட்டி நடனத்தை நீங்களும் பாருங்கள்…