26.8 C
Chennai
Thursday, Nov 21, 2024
cook 6

சூப்பரான சுவையவெண்டிக்காய் அவியல் செய்வது எப்படி…!!

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பார்கள். எனவே குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிகம் கொடுப்பது நல்லது. அதிலும் இதனை அவியல் போன்று செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இங்கு மிகவும் சிம்பிளாக வெண்டைக்காய் அவியலை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 15

புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 1/2 கப்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 3/4 கப்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் – 2

சீரகம் – 1 டீஸ்பூன்cook 6

செய்முறை

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பின் வெண்டைக்காயைப் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, பின்பு புளிச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்கு 15 நிமிடம் காயை வேக வைக்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 2 நிமிடம் பிரட்டி இறக்கினால், வெண்டைக்காய் அவியல் ரெடி!!!